Page Loader
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நிலவு ஆராய்ச்சி வாகனத்தில், சென்னையின் பங்கு
ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் ரோவர்

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் நிலவு ஆராய்ச்சி வாகனத்தில், சென்னையின் பங்கு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 21, 2022
07:13 pm

செய்தி முன்னோட்டம்

நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் ரோவர் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. பத்து நாட்களுக்கு முன், இந்த ஆராய்ச்சி வாகனம், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 15-ம் தேதி, நிலவின் பாதையை வெற்றிகரமாக அடைந்தபின், ரஷீத் ரோவர், அல் கவானநீஜ் விண்வெளி மையத்துக்கு தகவல் அனுப்பியுள்ளது. இந்த வெற்றிகரமான ஆராய்ச்சி வாகனத்தில், 90 சதவீதம் உதிரிபாகங்கள், சென்னையை சேர்ந்த 'எஸ்டி அட்வான்ஸ்டு காம்போசிட்ஸ்' (ST Advanced Composites) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இது ஒரு எட்டு வருட பழமையான, ஸ்டார்ட்அப் நிறுவனம் என்பது கூடுதல் தகவல். ஜப்பானின் ஸ்பேஸ்எக்ஸ் லேண்டர் ராக்கெட்டில், பொருத்தப்பட்டு, சந்திரனின் பாதையில் செலுத்தப்பட்டது. இன்னும் 2 மாதங்களில் இலக்கை அடையும் என கணிக்கப்படுகிறது.

ரஷித் ரோவரும், நம்ம சென்னையும்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் ரோவர்

கார்பன் ஃபைபர் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக் (சிஎஃப்ஆர்பி), மெக்னீசியம் அலாய் மற்றும் அலுமினியம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, கடந்த இரண்டு வருடங்களாக, சென்னையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் தேவேந்திர திருநாவுக்கரசு கூறினார். ரஷீத் ரோவரில் அமைந்துள்ள பல முக்கிய பாகங்கள்- கேமரா, சக்கரம் முதலியவை இந்த சென்னை நிறுவனத்தினுடையது என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் இது போன்று நிறைய ஸ்டார்ட்அப்கள் செயற்கைகோள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஹைதராபாத்தை சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், விண்வெளி ஆராய்ச்சிக்கு செயற்கைகோள் வாகனங்கள் அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் என்ற அறியப்படுகிறது. மேலும், பெங்களூரைச் சேர்ந்த பிக்சல் மற்றும் ஹைதராபாத் துருவா ஸ்பேஸ் போன்ற தனியார் நிறுவனங்கள், செயற்கைகோள்கள் ஏவுவதில் கவனம் செலுத்திக்கொண்டு இருக்கின்றன.