அடுத்த செய்திக் கட்டுரை

இனி ட்விட்டர் பயனாளர்களும் சம்பாதிக்கலாம் - எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!
எழுதியவர்
Siranjeevi
Feb 06, 2023
02:17 pm
செய்தி முன்னோட்டம்
ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கும் என அறிவித்துள்ளது.
ட்விட்டரின் புளூ வெரிஃபைடுக்கு குழுவைச்சேர்ந்த படைப்பாளர்களுடன் மட்டுமே நிறுவனம் ரிப்ளை-திரெட் விளம்பரங்களின் வருவாயைப் பகிர்ந்து கொள்ளும் என எலான் மஸ்க் அறித்து உள்ளார்.
இதற்கு தகுதி பெற "Twitter Blue Verified"-ன் சந்தாதாரராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே,மாதத்திற்கு $8 கட்டணம் வசூலிக்கும் "Twitter Blue Verified" சேவையின் சந்தாதாரர்கள் மட்டுமே வருவாய் பங்கைப் பெற தகுதியுடையவர்கள் என்று அவர் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
எலான் மஸ்க்
Starting today, Twitter will share ad revenue with creators for ads that appear in their reply threads
— Elon Musk (@elonmusk) February 3, 2023