ட்விட்டரின் அடுத்த அப்டேட்: மூன்று வண்ணத்தில் வெரிஃபைடு டிக்குகள்
ட்விட்டர் நிறுவனம் சென்ற சனிக்கிழமையன்று, ட்விட்டர் ப்ளூ சேவையை பெற விரும்பும் பயனாளர்களை வரவேற்பதாகவும், அந்த சிறப்பு சேவை திங்கள் முதல் அமல்படுத்த போவதாகவும் அறிவித்தது. மேலும் இந்த வெரிஃபைடு டிக் மாத சந்த அடிப்படையில் வழங்கவிருப்பதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில், ட்விட்டர் கணக்குகள் இப்போது மூன்று வண்ணங்களில் சரிபார்க்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முன்னரே மஸ்க், "அனைத்து சரிபார்க்கப்பட்ட தனிப்பட்ட மனிதர்களும் ஒரே நீல நிற சரிபார்ப்பைக் கொண்டிருப்பார்கள், ஏனெனில் "குறிப்பிடத்தக்கது" என்பதன் எல்லை மிகவும் அகநிலையானது." என்று ட்வீட் செய்துள்ளார். "நிறுவனங்களுக்கான தங்க நிற டிக், அரசாங்கத்திற்கான சாம்பல் நிற டிக் , தனிநபர்களுக்காக நீலம். அனைத்து கணக்குகளும் வெரிஃபைடு டிக் வழங்குவதற்கு முன் தனி தனியாக சரிபார்க்கப்படும்." என்றும் கூறினார்.
பல வண்ண டிக் முறை எலான் மஸ்க் என்ன கூறினார்
தற்போதைய பல வண்ண டிக் முறை பற்றி கூறுகையில், மஸ்க், ' கொடுமையானது, ஆனால் அவசியம்' என்று குறிப்பிட்டார். மேலும் இந்த முறை எவ்வாறு செயல்படும் என்பது குறித்த 'நீண்ட விளக்கம் அடுத்த வாரம் வெளிவரும்' என்று அவர் கூறினார். "அனைத்து வெரிஃபைடு பயனாளர்களும் ஒரே நீல நிற டிக் பெறுவார்கள். அந்த தனிநபர்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பால் வெரிஃபை செய்யப்பட்டால், அவர்கள் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டும் இரண்டாம் சிறிய லோகோவைக் கொண்டிருக்கும். இது குறித்து அடுத்த வாரம் நீண்ட விளக்கம் கொடுப்போம்." என்றார். மறுதொடக்கம் செய்யப்பட்ட ப்ளூ டிக் சேவையானது இணைய பயனர்களுக்கு மாதம் $8 மற்றும் ஐபோன் பயனர்களுக்கு $11 செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.