டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்
தமிழக அரசு, விதவை பெண்களின் மறுமணத்திற்கென்று 2 தனித்திட்டங்களை செயல்படுத்துகிறது. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் என பெயரிடப்பட்டுள்ள அத்திட்டம் குறித்து விரிவாக காணலாம்: முதல் திட்டம்: தங்கள் விருப்பத்திற்கேற்ப திருமாங்கல்யம் செய்து கொள்ள பணஉதவி ரூ. 25000 /- , இரண்டு விதமாக வழங்கப்படும். (ரூ.15,000 ரொக்கம் & ரூ.10,000 தேசிய சேமிப்பு சான்றிதழ்). இத்திட்டத்தில் பயன் பெற கல்வி தகுதி தேவை இல்லை. இரண்டாம் திட்டம்: திருமாங்கல்யம் செய்து கொள்ள பணஉதவி ரூ. 50 000 /- இரண்டு விதமாக வழங்கப்படும். (ரூ.30,000 ரொக்கம் & ரூ.20,000 தேசிய சேமிப்பு சான்றிதழ்). இதில் பயன்பெற, பட்டப்படிப்போ, அதற்கு மேற்பட்ட படிப்போ, படித்திருக்க வேண்டும்.
விதவை மறுமண உதவித் திட்டம்
ஒரு வேளை, டிப்ளமோ முடித்திருந்தால், தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பயின்றிருக்க வேண்டும். இந்த இரு திட்டங்களிலும், ரொக்க பணத்துடன், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் முக்கிய தகுதி, மணமுடிக்கும் பெண்ணிற்கு, குறைந்தது 20 வயது முதல் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் இணைய, வருமான தகுதி என ஏதும் கிடையாது. சம்மந்தப்பட்ட திட்டத்தில் சேர, அதற்குரிய தகுதி சான்றிதழ்களை மட்டும் பிரதி எடுத்து, அதனுடன் திருமண அழைப்பிதழையும் இணைத்து, விண்ணப்பத்துடன் திருமணம் முடிந்து 40 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.