
விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அறிமுகமாகும் த்ரெட்ஸ், ஏன் இந்தத் தாமதம்?
செய்தி முன்னோட்டம்
உலகளவில் பல்வேறு நாடுகளில், கடந்த ஜூலை மாதமே எக்ஸூக்கு (X) போட்டியான தங்களுடைய புதிய சமூக வலைத்தளமான த்ரெட்ஸை (Threads) அறிமுகப்படுத்தியது மெட்டா. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் த்ரெட்ஸை அந்நிறுவனம் இன்னும் அமல்படுத்தவில்லை.
த்ரெட்ஸ் தளம் மூலம் சேகரிக்கும் பயனாளர் தகவல்களை அந்நிறுவனம் பயன்படுத்தும் விதம் தொடர்பான பல்வேறு தடைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்ட வடிவில் இருக்கின்றன.
இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் த்ரெட்ஸின் வெளியீட்டைத் தள்ளி வைத்திருந்தது நிலையில், இந்த மாதம் தங்களுடைய புதிய தளத்தை ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மெட்டா.
ஆனால், அது பிற நாடுகளில் இருப்பதைப் போல இல்லாமல், ஐரோப்பிய ஒன்றிய பயனாளர்களை பார்வையாளர்களாக மட்டுமே இருக்கும் வகையிலான பயன்பாட்டையே அளிக்கத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
சமூக வலைத்தளம்
ஐரோப்பிய ஒன்றியத்தில் த்ரெட்ஸின் பயன்பாடு:
அதாவது, பிற நாடுகளில் உள்ள பயனாளர்களால் த்ரெட்ஸ் தளத்தில் பதிவிடவும் முடியும், பிறருடை பதிவுகளைப் பார்க்கவும் முடியும்.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பயனாளர்களால் த்ரெட்ஸில் பிறருடைய பதிவுகளை பார்க்க மட்டுமே முடிகிற வகையிலான வயதியுடன் தங்களது புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
அந்நாட்டின் டிஜிட்டல் சட்டங்களுடன் ஒத்துப் போகும் பொருட்டு இவ்விதமான பயன்பாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பயனாளர்களுக்குக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறது அந்நிறுவனம்.
எனினும், இந்த வகையிலான பயன்பாட்டை எப்படி அந்நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தில் அமல்படுத்த மெட்டா திட்டமிட்டிருக்கிறதென்ற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.
மெட்டா
தகவல்களை சேகரிக்கும் த்ரெட்ஸ்:
இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கைப் போல இல்லாமல் த்ரெட்ஸின் இன்னும் விளம்பரங்களை மெட்டா அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், பல்வேறு விதமான பயனாளர்களின் தகவல்களை த்ரெட்ஸ் தளத்தின் மூலம் அந்நிறுவனம் சேகரித்து வருகிறது.
பயனாளர்களின் டிஜிட்டல் நடவடிக்கைகள் மூலமாக, அவர்களுடைய இருப்பிடத் தகவல்கள், தேடுதல் தகவல்கள், தொடர்புகள், உடல்நலம் சார்ந்த தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் என பல்வேறு வகையிலும் தகவல்களை சேகரித்து அதனை மூன்றாம் தரப்பினருடனும் பகிர்ந்து கொள்வதாகக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
ஒரு முறை த்ரெட்ஸ் கணக்கை பயனாளர்கள் உருவாக்கி விட்டால், அவர்களுடைய இன்ஸ்டாகிராம் கணக்கையும் சேர்த்து நீக்கினால் மட்டுமே, த்ரெட்ஸ் கணக்கையும் நீக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.