Page Loader
பான் கார்டு பயனர்கள் எச்சரிக்கை: பான் கார்டு தொடர்பான இந்த சிறு தவறு, ரூ.10,000 அபாரதத்திற்கு வழிவகுக்கும்
பான் கார்டு பயனர்கள் எச்சரிக்கை

பான் கார்டு பயனர்கள் எச்சரிக்கை: பான் கார்டு தொடர்பான இந்த சிறு தவறு, ரூ.10,000 அபாரதத்திற்கு வழிவகுக்கும்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 21, 2022
07:10 pm

செய்தி முன்னோட்டம்

வருமான வரி துறையால், வழங்கப்படும் 10 இலக்க தனித்துவமான எண் தான், பான். இந்த பான் கார்டு நாடு முழுவதும் பல முக்கியமான பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தனி நபரின் வருமானம், முதலீடு உட்பட அனைத்து நிதி விவரங்களும், இந்த பான் கார்டில் இணைக்கப்பட வேண்டும். பான் கார்டு விவரங்களைத் தாக்கல் செய்ய நேரும்போது, ஏதேனும் தவறு இருந்தால், தங்களது வங்கிக் கணக்கு முடக்கப்படும். அதோடு, அபராதம் செலுத்த நேரிடும். வருமான வரி சட்டம், 1961 இன் பிரிவு, 272B இன் கீழ், தவறான பான் தகவலை வழங்கும் நபருக்கு, ரூ.10,000 அபராதம் விதிக்கலாம். குறிப்பாக, வருமான வரி கணக்கு படிவத்தை தாக்கல் செய்யும் போது, இந்த விதி பொருந்தும்.

மேலும் படிக்க

பான் கார்டு பயனர்கள் எச்சரிக்கை

தவறான தகவல் மட்டுமல்லாது, 2 பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கும், இது பொருந்தும். ஒருவர், ஒரு பான் கார்டை மட்டும் வைத்திருக்க வேண்டும். ஒரு நபருக்கு இரண்டு பான் கார்டுகள் இருந்தால், வருமான வரி துறை உங்களது 2 பான் கார்டைகளையும் ரத்து செய்வதோடு மட்டுமல்லாமல், அபராதமும் விதிக்கும். எனவே, பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, ஒருவர் இரண்டாவது பான் கார்டை உடனடியாகத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இரண்டாவது பான் எண்ணை ஒப்படைக்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளை பின்பற்றலாம். பான் கார்டை ஒப்படைப்பதற்கான படிவங்கள், இரு தளங்களிலும் உள்ளது. அந்த படிவத்தை பூர்த்தி செய்து, அருகில் இருக்கும் NSDL அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இரண்டாவது பான் கார்டை, நிரப்பப்பட்ட படிவத்துடன் இணைக்கவும்.