2022: மக்களால் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியல்
2022 வருடம் முடியும் நேரத்தில், இந்தாண்டு மக்களால் அதிகம் விரும்பப்பட்ட, டவுன்லோட் செய்யப்பட்ட, சில ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியலை காண்போம். இன்ஸ்டாகிராம்: பேஸ்புக்-ஐ போல் இதுவும் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட செயலியாகும். இதில் இருக்கும் போட்டோஸ், ரீலிஸ் என பல ஆப்ஷன்கள், மக்களின் மத்தியில் பிரபலம். இந்த ஆண்டு, 188.9 மில்லியன் டௌன்லோடுகளை பெற்றது இந்த செயலி. மீஷோ: மீஷோ, ஒரு ஆன்லைன் ஷாப்பிங் செயலி ஆகும். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு இந்த செயலியின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. ஷாப்சி: இந்தாண்டில், மக்களால் அதிகம் விரும்பப்பட்ட இந்த ஷாப்பிங் செயலி, பிளிப்கார்ட் நிறுவனத்தினுடையது. 156.5 மில்லியன் டவுன்லோட் பெற்றுள்ளது.
ஆண்ட்ராய்டு செயலிகள் ஆதிக்கம்
ஸ்னாப் சாட்: சமூக ஊடக செயலியான, இந்த ஸ்னாப் சாட், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு சற்று குறைவான ரசிகர்களே உள்ளனர். பிளிப்கார்ட்: இந்திய ஆன்லைன் ஷாப்பிங் செயலியான இந்த பிலிப்கார்ட், அமேசானிற்கு மாற்றாக கருதப்படுகிறது. லூடோ கிங்: மக்களால் அதிகம் விரும்பப்படும், கமிங் செயலி லுடோ கிங். இந்தாண்டு அதிகமாக, அனைத்து வயதினராலும் டவுன்லோட் செய்யப்பட்ட கேமிங் செயலி, லுடோ கிங். போன் பே: UPI செயலியான இந்த போன் பே, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை செய்ய பயன்படுகிறது. சென்ற ஆண்டை விட, இந்தாண்டு அதிக வளர்ச்சி கண்டுள்ளது. இதோடு, பேஸ்புக், ட்ரு காலர், மற்றும் வாட்சப் ஆகியவை என்றும் மக்கள் மத்தியில் பிரபலமாகவே உள்ளன.