NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நவம்பர் 1 முதல் ஓடிபி வராதா? டிராயின் முடிவால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நவம்பர் 1 முதல் ஓடிபி வராதா? டிராயின் முடிவால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கம்
    டிராயின் முடிவால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கம்

    நவம்பர் 1 முதல் ஓடிபி வராதா? டிராயின் முடிவால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 25, 2024
    04:34 pm

    செய்தி முன்னோட்டம்

    இ-காமர்ஸ் தளங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் ஓடிபிகள் போன்ற அனைத்து பரிவர்த்தனை செய்திகளையும் கண்டுபிடிப்பதை உறுதி செய்வதன் மூலம் ஸ்பேம் மற்றும் மோசடிகளைத் தடுக்க டிராய் புதிய நடைமுறையை கொண்டுவர உள்ளது.

    இந்த விதிமுறைகள் நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்திய தொலைத்தொடர்புத் தலைவர்களான ஜியோ மற்றும் ஏர்டெல் கவலை தெரிவித்துள்ளன.

    புதிய விதிமுறைகளின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்து பரிவர்த்தனை மற்றும் சேவை செய்திகளையும் கண்காணிக்க வேண்டும் மற்றும் ஓடிபி மற்றும் எச்சரிக்கை சேவைகளை கவனக்குறைவாக சீர்குலைக்கும் எந்த ஒழுங்கற்ற மெசேஜ் சங்கிலிகளையும் தடுக்க வேண்டும்.

    கோரிக்கை 

    விதியை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை 

    நவம்பர் 1 முதல் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என டிராய் கூறியுள்ள நிலையில், பல முதன்மை நிறுவனங்கள் மற்றும் டெலிமார்கெட்டர்கள் மாற்றத்திற்கு முழுமையாக தயாராக இல்லை என்று தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    கூடுதல் நேரம் இல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பயனர்கள் ஓடிபி டெலிவரி மற்றும் முக்கியமான பரிவர்த்தனை விழிப்பூட்டல்களில் குறுக்கீடுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து, தங்கள் அமைப்புகளை சீரமைக்க இரண்டு மாத கால நீட்டிப்பை அவர்கள் கோரியுள்ளனர்.

    மோசடி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சமீபத்தில் சர்வதேச உள்வரும் ஏமாற்று அழைப்புகளைத் தடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

    இந்த அமைப்பு இந்திய எண்கள் போல் தோன்றும் சர்வதேச அழைப்புகளை உள்ளடக்கிய மோசடிகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சைபர் குற்றங்கள்

    சைபர் குற்றங்களை தடுக்க அரசு நடவடிக்கை

    இது சைபர் குற்றவாளிகளால் அரசாங்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யவும் பாதிக்கப்பட்டவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

    டிராய் விதிமுறைகள் மற்றும் மோசடி எதிர்ப்பு முயற்சிகள் சைபர் கிரைம் அதிகரிப்பதற்கு பதிலளிக்கும் வகையில் வருகின்றன.

    குறிப்பாக மோசடி செய்பவர்கள் பணம் பறிப்பதற்காக சட்ட அமலாக்க அதிகாரிகளாக காட்டிக் கொள்ளும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்த முன்னெடுப்பை டிராய் மேற்கொண்டுள்ளது.

    டிராயின் முன்முயற்சிகள் டிஜிட்டல் தகவல்தொடர்புகளைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான படியைக் குறிக்கும் அதே வேளையில், விதிமுறையை அமல்படுத்துவதற்கான நீட்டிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படாத வரை, ஓடிபி சேவைகளில் நுகர்வோர் தற்காலிக இடையூறுகளைச் சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைபர் கிரைம்
    சைபர் பாதுகாப்பு
    ஏர்டெல்
    ஜியோ

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    சைபர் கிரைம்

    தகவல்களைத் திருடும் செயலி.. பிளே ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்.. பயனர்களுக்கும் எச்சரிக்கை! கூகுள்
    சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்! சமூக வலைத்தளம்
    தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி? சைபர் பாதுகாப்பு
    சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு சைபர் பாதுகாப்பு

    சைபர் பாதுகாப்பு

    கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பேவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள்.. அதிர்ச்சியளித்த ரஷ்ய நிறுவனம்! கூகுள்
    இந்தியாவில் சைபர் பாதுகாப்பில் குறைந்த முதலீடுகள், அதிகரிக்கும் சைபர் தாக்குதல் சைபர் கிரைம்
    IIT, NITகளை குறி வைத்து, சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு சைபர் கிரைம்
    கூகுள் பிளே ஸ்டோரில் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர்களைக் கொண்ட சீன செயலிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன கூகுள்

    ஏர்டெல்

    365 நாட்களுக்கு ஓடிடி இலவசம்! ஏர்டெல்லின் அதிரடி ரீச்சார்ஜ் திட்டம் இந்தியா
    125 நகரங்களில் 5ஜி பிளஸ் சேவை அறிமுகப்படுத்திய ஏர்டெல்! நன்மைகள் என்ன? இந்தியா
    ரூ.239 இலவச ரீசார்ஜ் திட்டம் உண்மை இல்லை! PIB எச்சரிக்கை தொழில்நுட்பம்
    ஏர்டெல் மற்றும் ஜியோ ப்ரீபெய்ட் கிரிக்கெட் திட்டங்களில் எது சிறந்தவை? ஜியோ

    ஜியோ

    முதல் VR ஹெட்செட்டை இந்தியாவில் வெளியிட்டது ஜியோ! என்ன ஸ்பெஷல்? கேட்ஜட்ஸ்
    சந்தாதாரர் சேவையை அறிமுகப்படுத்தியது ஜியோசினிமா! ஹாட்ஸ்டார்
    5G சேவையை தொடங்கவிருக்கும் வோடபோன் ஐடியா.. என்ன திட்டம்? வோடஃபோன்
    அமெரிக்க நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது ஜியோ சினிமா! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025