சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாளை பூமி திரும்புவார் சுனிதா வில்லியம்ஸ்: நேரலை விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) வெளியேற உள்ளனர்.
இது விண்வெளியில் அவர்களின் ஒன்பது மாத அசாதாரண பயணத்தை முடித்து வைக்கிறது.
போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் எட்டு நாள் குறுகிய சோதனைப் பயணமாக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட அவர்களின் பணி, அவர்களின் வாகனத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக நீட்டிக்கப்பட்டது.
தற்போது சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் மற்றும் இரண்டு க்ரூ-9 உறுப்பினர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு நாளை அதிகாலை திரும்புகிறார்.
திரும்பும் பயணம்
சுனிதாவின் பூமிக்கு திரும்பும் பயணம்
சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் விண்வெளி வீரர்களான நிக் ஹேக் மற்றும் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் ஏறுவார்கள்.
நான்கு விண்வெளி வீரர்களும் மார்ச் 19 அன்று அதிகாலை 3:27 மணிக்கு இந்திய நேரப்படி புளோரிடா கடற்கரையில் இருந்து 17 மணி நேர பயணத்திற்குப் பிறகு பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவார்கள்.
விண்வெளியில் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் தங்கிய பிறகு பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மாற்றியமைப்பதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள அவர்கள் தயாராகி வருவதால், இது அவர்களின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
நேரலை
நேரலையில் பார்ப்பது எப்படி
ஹாட்ச் மூடல், அன்டாக்கிங் மற்றும் ஸ்பிளாஷ் டவுன் உள்ளிட்ட முழு திரும்பும் செயல்முறையையும் நாசா நேரடியாக ஒளிபரப்பும்.
மார்ச் 17, 2025 திங்கள் கிழமை இரவு 10:45 ET மணிக்கு கவரேஜ் தொடங்கும்.
ஹாட்ச் மூடலுக்கான தயாரிப்புகளுடன் நேரலை தொடங்கும்.
இந்த நிகழ்வை நாசா தொலைக்காட்சியிலும், அவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமும் நேரடியாக காணலாம்.
அதோடு நாசாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலும் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பு செய்யும்.