சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்பதற்காக விண்வெளிக்கு கிளம்பியது எஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்
தொழிலதிபர் எலோன் மஸ்க் நிறுவிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்டுக் கொண்டுவருவதற்காக சனிக்கிழமை (செப்டம்பர் 28) விண்கலத்தை ஏவியுள்ளது. நாசாவின் நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரைக் கொண்ட காப்ஸ்யூல், பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த மாத தொடக்கத்தில் போயிங் விண்கலம் பூமிக்கு காலியாகத் திரும்பிய சோதனை விமானிகளை வரவழைக்க ஏவப்பட்டது. புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் 2025 பிப்ரவரியில் திரும்புவார்கள். ஏறக்குறைய ஆறு மாதங்களுக்கு ஒருமுறை விண்வெளி நிலையக் குழுக்களை நாசா மாற்றுவதால், வில்மோர் மற்றும் வில்லியம்ஸுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு காலி இருக்கைகளுடன் புதிதாக ஏவப்பட்ட இந்த விண்கலம் பிப்ரவரி பிற்பகுதி வரை திரும்பாது.
ஸ்பேஸ் எக்ஸை அனுப்பியதன் காரணம்
த்ரஸ்டர் சிக்கல்கள் மற்றும் ஹீலியம் கசிவுகள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக போயிங்கின் ஸ்டார்லைனர் மிகவும் ஆபத்தானது என்று நாசா முடிவு செய்ததை அடுத்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கவைக்கப்பட்டனர். இதனால், இருவரும் பூமிக்கு திரும்புவதற்கு ஏதுவாக, ஸ்பேஸ்எக்ஸ் ஏவிய விண்கலத்தில் பயணிக்கவிருந்த இரண்டு பேர் விடுவிக்கப்பட்டு, தற்போது இரண்டு பேர் மற்றும் இரண்டு காலி இறக்கைகளுடன் விண்கலம் கிளம்பியுள்ளது. விண்வெளி வீரர் ஜீனா கார்ட்மேன் மற்றும் மூத்த விண்வெளி வீரர் ஸ்டெபானி வில்சன் விடுவிக்கப்பட்ட இரண்டு பேர் ஆவர். இதற்கிடையே, சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்தின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.