இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ்
இஸ்ரோ உருவாக்கிய 4,700 கிலோ எடையுள்ள ஜிசாட் 20 செயற்கைக்கோளை, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள கேப் கேனரவல் ஏவுதளத்திலிருந்து, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), தகவல் தொடர்பு நெட்வொர்க்கை மேம்படுத்த GSAT 20 செயற்கைக்கோளினை வடிவமைத்துள்ளது. இதன் எடை 4,700 கிலோ. இதன் அதிக எடை காரணமாக இஸ்ரோவின் உள்ளூர் ராக்கெட்டுகளால் இதனை விண்ணில் செலுத்துவது சிரமம். இதனால்தான், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை இஸ்ரோ நாடியது. ISROவின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட Space X, செயற்கைக்கோளை தங்களுடைய பால்கன் 9 ராக்கெட்டின் மூலம் இன்று விண்ணில் ஏவியது.
Twitter Post
ஜிசாட் 20 செயற்கைக்கோளின் பயன்கள்
ஜிசாட் 20 செயற்கைக்கோளில் உள்ள தகவல் தொடர்பு பேலோட் 14 ஆண்டுகள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் செயல்படுத்தப்பட்டவுடன், இந்தியாவின் தொலைதூர பகுதிகளுக்கான இணைய இணைப்பை வழங்கும். இந்த செயற்கைக்கோளில் 32 பீம்கள் கொண்ட ஏலிசிடி (beams) உள்ளன, அவை வேகமான இணைய சேவையை வழங்க உதவும். இதன் மூலம் அதிவேக இணைய சேவையைப் பெற முடியும். மேலும் இந்த செயற்கைகோள் செயல்படுத்தப்பட்டால், விமானத்தில் இணைய சேவைகளை வழங்க முடியும். கடந்த காலத்தில், இந்தியா அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் பணிகளுக்காக ஐரோப்பிய ஏவுதல் வழங்குநரான ஏரியன்ஸ்பேஸை நம்பியிருந்தது. எனினும் தற்போது, புவிசார் அரசியல் பதட்டங்களை ரஷ்யா மற்றும் சீனாவின் விருப்பங்களை கட்டுப்படுத்துவதால், SpaceX -இடம் இந்த பணியை இந்தியா ஒப்படைத்தது.