
கோடைக்காலத்தில் உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க 6 வழிமுறைகள் இங்கே!
செய்தி முன்னோட்டம்
கோடைக்காலம் நெருங்கி விட்டதால் அதிக வெப்பநிலை காரணமாக ஸ்மார்ட்போன்களும் பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும்.
எனவே, கோடைக்காலத்தில் உங்கள் ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
1. முதலில் ஸ்மார்ட்போனை கார்களுக்கு வைத்து விட்டு செல்லவேண்டாம்.
ஆப்பிள் நிறுவனத்தின் தகவலின்படி 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையால் ஸ்மார்ட்போனி பேட்டரி பாதிக்கப்படும் என கூறியுள்ளனர்.
ஆனால், ஆண்ட்ராய்டு போன்களுக்கு எந்த அறிக்கையு இல்லை.
2. அதேபோல், வாகனம் ஓட்டும்போது ஸ்மார்ட்போனை டேஷ்போர்டில் வைக்ககூடாது.
3. ஸ்மார்ட்போனை சூரிய ஒளிபடும்படி வைக்க வேண்டாம். சார்ஜ் செய்யும் போது குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.
ஸ்மார்ட்போன்
கோடைக்காலத்தில் ஸ்மார்ட்போனை பாதுகாப்பது எப்படி?
4. சூரிய ஒளியில் நடமாடிக்கொண்டு உரையாடும் போது உங்கள் போன் அதிக வெப்படமடையக்கூடும். இதன்பின் நீங்கள் ஸ்மார்ட்போனுக்கு சிறிது நேரம் அணைத்து வைத்து சூட்டை குறைக்க வேண்டும்.
5. முக்கியமாக இங்கு ஸ்மார்ட்போன் அதிக சூட்டை தவிர்க்க நீண்ட நேரம் சார்ஜ் செய்ய வேண்டாம். அதிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் சார்ஜ் செய்வதை தவிர்க்கவும்.
இதனால், உங்கள் போன் சூடாவதைத் தடுக்கவும், டிஸ்பிளே பாதிப்பும் உண்டாகாமல் இருக்கும்.
6. கேஸ் அடுப்பு மற்றும் நீர் இடங்களில் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
உங்கள் ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் பயன்படுத்துவதையும் தவிர்த்துவிட்டு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தினால் நீண்ட வருடம் உழைக்கும்.