Y குரோமோசோமை முதல் முறையாக வரிசைப்படுத்தியிருக்கும் விஞ்ஞானிகள்
செய்தி முன்னோட்டம்
அறிவியல் ரீதியாக ஆண்களிடம் காணப்படும் Y குரோமோசோமை முதன் முறையாக வரிசைப்படுத்தியிருக்கின்றனர் விஞ்ஞானிகள். பூமியில் வாழும் உயிரினங்களில் இரு வகையான குரோமோசோம்கள் காணப்படுகின்றன.
ஒன்று X குரோமோசோம், மற்றொன்று Y குரோமோசோம். இனப்பெருக்க செயல்பாடுகளில் இந்தக் குரோமோசோம்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஒரு குரோமோசோம் என்படுவது, மிகவும் நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் DNA-க்களால் ஆனது. இந்த DNA-க்களை குறிப்பிட்ட முறையில் வரிசைப்படுத்துவதன் மூலம் X அல்லது Y குரோமோசோமை நம்மால் பெற முடியும்.
மேற்கூறிய இரண்டு குரோமோசோம்களில், 2020ம் ஆண்டே X குரோமோசோமை விஞ்ஞானிகள் வரிசைப்படுத்திய நிலையில், மிகவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்ட Y குரோமோசோமை தற்போது முழுமையாக வரிசைப்படுத்தியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மேலும், குரோமோசோம் வரிசைப்படுத்தல் குறித்த ஆய்விதழ் ஒன்று நேச்சர் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிவியல்
எதற்காக இந்த ஆராய்ச்சி?
Y குரோமோசோமின் வரிசைப்படுத்தல் என்பது, மனித மரபணுத்தொகையினை (Genome) புரிந்து கொள்வதில் அடுத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த Y குரோமோசோமில் உள்ள சில மரபணுக்களே, விந்தணு உற்பத்தி மற்றும் புற்றுநோய் அபாயத்திற்கும் காரணமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குரோமோசோமைப் புரிந்து கொள்வதன் மூலமும், தற்போது இவற்றை வரிசைப்படுத்தியிருப்பதன் மூலமும், ஆண்களிடம் காணப்படும் மலட்டுத்தன்மை குறித்த ஆராய்ச்சிகளுக்கு இவை மிகவும் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வில் பங்கெடுத்திருக்கும் National Human Genome Research Institute-ஐச் சேர்ந்த முக்கியமான விஞ்ஞானி ஒருவர் பேசும் போது, "புதிய வரிசைப்படுத்தும் தொழில்நுட்பங்களும், கணக்கீட்டு வழிமுறைகளுமே தற்போதைய முடிவுகளுக்குக் காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.