கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் 'கேலக்ஸி டேப் S9 சீரிஸ்' டேப்லட்களை அறிமுகப்படுத்தியது சாம்சங்
சாம்சங் ரசிகர்களுடன் ஆவளுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த கேல்கஸி அன்பேக்டு நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்த நிகழ்வில் நாம் எதிர்பார்த்ததைப் போலவே ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் டேப்லட் எனப் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங். சாம்சங் டேப் S9 சீரிஸ்: தங்களுடைய ப்ளாக்ஷிப் டேப்லட் சீரிஸாக இந்த S9 சீரிஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங். டேப் S9, டேப் S9+ மற்றும் டேப் S9 அல்ட்ரா ஆகிய மூன்று மாடல்கள் இந்த S9 சீரிஸின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அடிப்படையான S9-ல் 11 இன்ச் டிஸ்பிளே, S9+-ல் 12.4 இன்ச் டிஸ்பிலே மற்றும் டாப் எண்டான S9 அல்ட்ராவில் 14.6 இன்ச் டிஸ்பிளேவை வழங்கியிருக்கிறது சாம்சங்.
என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது டேப் S9 சீரிஸ்?
அனைத்து மாடல்களிலும் AMOLED டிஸ்பிளே, IP68 ரேட்டிங் மற்றும் ஸ்டைலஸை பயன்படுத்தும் வசதியை ஸ்டாண்டர்டாக வழங்கியிருக்கிறது சாம்சங். இந்த டேப் S9 சீரிஸ் டேப்லட்களிலும் குவால்காமின் ப்ளாக்ஷிப்பான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர்களையே பயன்படுத்தியிருக்கிறது சாம்சங். அனைத்து மாடல்களிலும் பின்பக்கம் 13MP+8MP டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் முன்பக்கம் 12MP அல்ட்ரா-வைடு கேமரா வழங்கப்பட்டிருக்கும் நிலையில், டாப் எண்டில் மட்டும் முன்பக்கம் கூடுதல் 12MP கேமரா ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய ஃப்ளாக்ஷிப் டேப்லட்கள் 12GB+512GB வசதியுடன் அறிமுகமாகியிருக்கின்றன. S9-ல் 8,000mAh பேட்டரி, S9+-ல் 10,090mAh பேட்டரி மற்றும் S9 அல்ட்ராவில் 11,200mAh பேட்டரி வழங்கப்பட்டிருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை அனைத்து மாடல்களிலும் வழங்கியிருக்கிறது அந்நிறுவனம்.