
ரூ.12,999க்கு, புதிய பட்ஜெட் டேப்லட்களை அறிமுகப்படுத்திய சாம்சங்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்ஜெட் விலையிலான புதிய 'பேடு கோ' டேப்லட்டை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது பட்ஜெட் விலையிலான இரண்டு புதிய டேப்லட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங்.
புதிதாக 'டேப் A9' மற்றும் 'டேப் A9+' ஆகிய இரண்டு டேப்லட்களை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சாம்சங். என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கின்ற இந்த புதிய டேப்லட்கள்?
இரண்டு டேப்லட்களிலுமே ஆண்ட்ராய்டு 13ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன் UI 5.1.1 இயங்குதளத்தையே கொடுத்திருக்கிறது சாம்சங். இரண்டு டேப்லட்களுமே டார்க் ப்ளூ, கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கின்றன.
தற்போது அமேசான் தளத்தின் மூலம் இந்த டேப்லட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சாம்சங்
சாம்சங் கேலக்ஸி டேப் A9: வசதிகள் மற்றும் விலை
60Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 8.7 இன்ச் LCD டிஸ்பிளேவைப் பெற்றிருக்கிறது டேப் A9. இந்த டேப்லட்டில் பின்பக்கம் 8MP ரியர் கேமராவும், முன்பக்கம் 2MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மீடியாடெக் ஹீலியோ G99 ப்ராசஸரைக் கொண்டிருக்கும் இந்த கேலக்ஸி டேப் A9-ல், 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும், 15W சார்ஜிங் வசதி கொண்ட 5,100mAh பேட்டரி, டூயல் சிம், வை-பை 5, ப்ளூடூத் 5.0 மற்றும் டைப்-சி போர்ட் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த டேப்லட்டின் வை-பை வேரியன்டை ரூ.12,999 விலையிலும், 4G வசதி கொண்ட வேரியன்டை ரூ.13,999 விலையிலும் வெளியிட்டிருக்கிறது சாம்சங்.
டேப்லட்
சாம்சங் கேலக்ஸி டேப் A9+: வசதிகள் மற்றும் விலை
90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 11 இன்ச் LCD டிஸ்பிளேவைப் பெற்றிருக்கிறது டேப் A9+. இந்த டேப்லட்டில் பின்பக்கம் 8MP ரியர் கேமராவும், முன்பக்கம்52MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
குவால்காம் ஸ்னாப்டிகாரன் 695 ப்ராசஸரைக் கொண்டிருக்கும் இந்த கேலக்ஸி டேப் A9+-ல், 4GB/64GB மற்றும் 8GB/128GB என இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் தேர்வுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
A9-ன் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகளை A9+லும் கொடுத்திருக்கிறது சாம்சங். கூடுதலாக 15W சார்ஜிங் வசதி கொண்ட 7,040mAh பேட்டரியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த டேப் A9+ன் வை-பை (8GB/128GB) வேரியன்டை ரூ.20,999 விலையிலும், 5G வசதி கொண்ட (4GB/64GB) வேரியன்டை ரூ.22,999 விலையிலும் வெளியிட்டிருக்கிறது சாம்சங்.