சாம்சங்கின் புதிய 'கேலக்ஸி F54', பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது?: ரிவ்யூ
மிட்ரேஞ்சு F-சீரிஸ் செக்மெண்டில் புதிய கேலக்ஸி F54 மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது சாம்சங் நிறுவனம். சாம்சங் கேலக்ஸி M54-ன் பேட்ஜ்டு வெர்ஷன் இந்த இந்த புதிய F54. சரி, சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது? பார்க்கலாம். வசதிகள்: 6.7 இன்ச் Super AMOLED டிஸ்பிளே சாம்சங் எக்ஸினோஸ் 1380 ப்ராசஸர் 108MP+8MP+2MP ரியர் கேமரா: 32MP செல்ஃபி கேமரா 6000 mAh பேட்டரி 25W சார்ஜிங் வசதி 5G வசதி ஆண்ட்ராய்டு 13 விலை: 8 GB ரேம் + 256 GB ஸ்டோரேஜ் - ரூ.29,999
சாம்சங் கேலக்ஸி F54: பயன்பாட்டிற்கு எப்படி இருக்கிறது?
4 வருட ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் 5 வருட பாதுகாப்பு அப்டேட்களை இந்த புதிய F54-க்கு உறுதியளித்திருக்கிறது சாம்சங். ரூ.30,000 விலைக்குள்ளான மொபல்களில் இந்தளவு அப்டேட் வேறு எந்த மொபைலிலும் அளிக்கப்படவில்லை. டிஸ்பிளே முதல் கேமரா வரை அனைத்தும் பயன்பாட்டிற்கு நன்றாகவே இருக்கிறது. இதன் ப்ராசஸர் மிகச்சிறப்பான பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கிறது எனக் கூற முடியாது. ஆனால், விலைக்கேற்ற வகையில் நன்றாக இருக்கிறது. இதன் 108MP கேமராவானது, சிறப்பான பெர்ஃபாமன்ஸை அளிக்கிறது. குறை என்று எதுவும் இல்லை. இதன் பெரிய பலமே பேட்டரி தான். கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய 6,000mAh பேட்டரி, சிறப்பு. 10-100% சார்ஜ் 1.30 மணி நேரத்தில் ஆகிறது. மிட்ரேஞ்சில் டீசன்ட்டான போன் இந்த சாம்சங் கேலக்ஸி F54.