ஆண்டுதோறும் பிரமாண்ட வளர்ச்சி காணும் IT துறையில், பெண்களின் வளர்ச்சி என்ன?
NASSCOM வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, தொழில்நுட்பத்துறையில், இந்தியா இந்த ஆண்டு 15.5% வளர்ச்சியைப் பதிவுசெய்தது. மேலும், 227 பில்லியன் அமெரிக்கா டாலர் வருவாயை எட்டியுள்ளது. அதற்கேற்றாற்போல் வேலை வாய்ப்பும் அதிகரித்தது. எனினும், பாலின இடைவேளையை கணக்கில் கொண்டால், மற்ற துறைகளை விட, தொழில்நுட்பத்துறையில், பெண்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டாலும், பாலின இடைவெளி அதிகமாகவே உள்ளது. தொழில்நுட்பம் சாராத நிறுவனங்களில், 79 % பெண்கள் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பணியமர்த்தபடுகின்றனர். காரணம், அங்கே தொழில்நுட்பம் என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறை அன்று. ஒரு நிறுவனத்தில், நிர்வாக நிலை தாண்டி பெண்களின் வளர்ச்சி முடக்கப்படுகிறது என்று அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
IT துறையில் பெண்கள்
7% பெண்கள் மட்டுமே நிர்வாக பதவிகளுக்கு தேர்ந்தெடுக்க படுகின்றனர் என்றும், 13% மட்டுமே இளநிலை நிர்வாக இயக்குநர் பதவி வரை உயர்த்தப்படுகின்றனர் என கருத்தாய்வு தெரிவிக்கின்றது. மேலும் சில ஆய்வறிக்கைகள் கூற்றின்படி, 63% இந்தியா நிறுவங்கள், திறமையான பணியாளர் பற்றாக்குறை உள்ளதாக கருதுகின்றது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், பொறியியல் சேவைகள் மற்றும் விற்பனை. இந்த பற்றாக்குறை தீர, பாலின இடைவெளி குறைய வேண்டும். பெண்களின் பங்கேற்பு பணியிடத்திற்கு அதிக மதிப்பை சேர்க்கிறது, அதாவது அதிகரித்த பணியாளர் ஈடுபாடு, தக்கவைப்பு மற்றும் தொழிலில் லாபம் ஆகியவை அதிகரிக்கிறது. கலவையான பாலின குழுக்கள், சிறந்த மாற்றுக் கண்ணோட்டங்களை கொண்டுவருகிறது. இதன் மூலம், தொழில் வளர்ச்சிப்பாதையில் செல்லும் என ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவிக்கிறது.