'இன்டிபெண்டன்ஸ்': ரிலையன்ஸின் புதிய FMCG பிராண்ட் அறிமுகம்
FMCG எனப்படும் தினசரி அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தயாரிப்பில், ரிலையன்ஸ் நிறுவனம் கால் பதித்துள்ளது. இதன் அறிமுக விழாவில் பங்கேற்ற ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸின் டைரக்டர், ஈஷா அம்பானி, ரிலையன்ஸ் ப்ரண்டின் FMCG பெயரை 'இன்டிபென்டன்ஸ்' என அறிவித்தார். இந்த ப்ராண்டில் பலவகையான நுகர்வோருக்கான பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளும், தினசரி அத்தியாவசியப் பொருட்களும் வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார். முதற்கட்டமாக, இந்த ப்ராண்டை குஜராத்தில் தொடங்க போவதாகவும், விரைவில் நாடு முழுவதும் அறிமுகம் செய்யவிருப்பதாகவும் ஈஷா தெரிவித்தார். ரிலையன்ஸ், நாடு முழுவதும், 12,000 க்கும் மேற்பட்ட சூப்பர் மார்கெட்களை 'ரிலையன்ஸ் ரீடெய்ல்' என்ற பெயரில் வெற்றிகரமாக செயல்படுத்தி கொண்டு இருக்கிறது.
ரிலையன்ஸ்
இப்போது தங்களின் சொந்தமான FMCG ப்ராண்ட் உருவாக்கத்தின் மூலம், இத்துறையில் ஏற்கனவே ஆளுமை செலுத்திக்கொண்டிருக்கும் ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே, ஐடிசி மற்றும் கோத்ரெஜ் ஆகியவையுடன் ரிலையன்ஸ் போட்டியிடவிருக்கிறது. இது குறித்து பேசிய அவர், "இது சமையல் எண்ணெய்கள், பருப்பு வகைகள், தானியங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் அன்றாட பொருட்களை, உயர் தரமான மற்றும் மலிவு விலையில் மக்களுக்கு தரும் முயற்சி". எனத்தெரிவித்தார். ஒரு ஆய்வறிக்கை, இன்னும் 10 ஆண்டுகளில், நுகர்வோர் பொருட்கள் உபயோகத்தில், ஆசியா 10 டிரில்லியன் அமெரிக்கா டாலர் வளர்ச்சியடையும் என்று கணித்துள்ளது.