
சத்தமின்றி இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்த ஜியோ நிறுவனம்: விவரங்கள் இங்கே
செய்தி முன்னோட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, ரூ. 899 மற்றும் ரூ. 349 என விலையை நிர்ணயித்துள்ளது. எனவே இரு ஜியோ திட்டங்களின் விவரங்களும் மைஜியோ மற்றும், சமூக வலைத்தளத்திலும் வெளியாகியுள்ளன.
புதிய ஜியோ பிரீபெய்ட் திட்டங்களில் அதிகபட்சம் 90 நாட்களுக்கான வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்புகள், தினசரி 2.5 ஜிபி டேட்டா மற்றும் இதர பலன்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 349 திட்டதில், தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவைகளை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.
இதில் வேலிடிட்டி காலம் முழுக்க 75 ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஜியோ பிரீபெய்ட்
2.5ஜிபி வேலிடிட்டியுடன் பிரீபெய்ட் திட்டங்கள்
இத்தோடு, தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் ஜியோகிளவுட் என அனைத்து அம்சங்களையும் வழங்குகிறது.
ஜியோ ரூ. 899 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்,தினமும் 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.
மேலும், அறிமுக சலுகையாக 5ஜி டேட்டாவும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை நாடு முழுக்க 100 நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை வழங்கி இருக்கிறது.
மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிட ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது