இந்தியாவில் வெளியான புதிய ரெட்மி பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்
செய்தி முன்னோட்டம்
ஷாவ்மியின் துணை நிறுவனமான ரெட்மி இந்தியாவில் ரெட்மி 13C மற்றும் ரெட்மி 13C 5G ஆகிய இரண்டு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது.
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6.74-இன்ச் HD+ திரைகளை வழங்கியிருக்கிறது ரெட்மி. ஆனால், 13C மாடலின் திரையானது 450 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சத்தையும், 13C 5G மாடலின் திரையானது 600 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சத்தையும் உமிழும் திறனைக் கொண்டிருக்கின்றன.
13C மாடலின் பின்புறம் 50MP+2MP கேமாரக்களுடன் கூடிய ட்ரிபிள் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், 13 5G மாடலில் 50MP முதன்மைக் கேமராவுன் கூடிய டூயல் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது.
13C மாடலின் முன்பக்கம் 8MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், 5G மாடலில் 5MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது.
ரெட்மி
ரெட்மி 13C மற்றும் ரெட்மி 13C 5G: ப்ராசஸர் மற்றும் விலை
இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், 13C மாடலில் மீடியாடெக் ஹீலியோ G85 சிப்செட் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், 13C 5G மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட்டைப் பயன்படுத்தியிருக்கிறது ரெட்மி. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு 13ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 14 இயங்குதளமே கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் 13C மாடலானது ரூ.8,999 தொடங்க விலையில் விற்பனை செய்யப்படவிருக்கும் நிலையில், 13C 5G மாடலானது ரூ.10,999 தொடக்க விலையில் விற்பனை செய்யப்படவிருக்கிறது.
டிசம்பர் 12ம் தேதி முதல் 13C மாடலும், டிசம்பர் 16ம் தேதி முதல் 13C 5G மாடலும், அமேசான் மற்றும் MI இணையதளங்களிலும், பிற ஷாவ்மி சில்லறை விற்பனைக் கடைகள் மூலமும் விற்பனை செய்யப்படவிருக்கின்றன.