Page Loader
14,000 ரூபாய்க்கு இந்தியாவில் வெளியானது ரியல்மி C67 5G ஸ்மார்ட்போன்
ரியல்மி C67 வகையின் அடிப்படை மாறுபாடு ரூ. 13,999க்கு விற்கப்படுகிறது.

14,000 ரூபாய்க்கு இந்தியாவில் வெளியானது ரியல்மி C67 5G ஸ்மார்ட்போன்

எழுதியவர் Sindhuja SM
Dec 14, 2023
05:16 pm

செய்தி முன்னோட்டம்

ரியல்மி நிறுவனம், இந்தியாவில் 'ரியல்மி C67 5G' ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரியல்மியின் C-சீரிஸ் வரிசையில் 5G இணைப்பை ஆதரிக்கும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். 120 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 6ஜிபி RAMஐ கொண்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போனில், 128ஜிபி வரையிலான உள்ளடக்கங்களை சேமித்து வைத்துக்கொள்ளலாம். இந்த ரியல்மி C67 வகையின் அடிப்படை மாறுபாடு ரூ. 13,999க்கு விற்கப்படுகிறது. இந்த மாறுபாடு 4ஜிபி RAMமையும் 128ஜிபி சேமிப்பிடத்தையும் கொண்டுள்ளது.

ட்ஜ்னுஹ்ல்

ரியல்மி C67 5G: வசதிகள் 

இந்த ஸ்மார்ட்போன்கள் டிசம்பர் 16ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு ஆஃப்லைன் ஸ்டோர்கள் மூலம் விற்பனைக்கு வரும். ரியல்மி C67 5G ஆனது முழு-HD+ தெளிவுத்திறனுடனும் 6.72-இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவுடனும் வெளியாகி இருக்கிறது. மேலும், 50MP(f/1.8) முதன்மை சென்சார் கேமரா, 2MP டெப்த் சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா ஆகிய கேமரா வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்கப்படுகிறது. அது போக, 8MP செல்ஃபீ கேமராவும் இதில் உள்ளது. யுனிசாக் T612 ப்ராசஸர் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளுடன் வெளியாகி இருக்கும் இந்த சாதனத்தில், 5,000mAh பேட்டரி கொள்ளளவும் உள்ளது.