ஜூன் 3 அன்று வானத்தில் நடக்கவுள்ள ஒரு அபூர்வ அணிவகுப்பு: எப்படி பார்க்க வேண்டும்?
விண்வெளி ஆராச்சியாளர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக அண்ட நிகழுவுகள் நடைபெறவுள்ளது. இந்த வான விருந்துக்காக அவர்கள் காத்திருக்கும் நிலையில் வரும் ஜூன் 3 ஆம் தேதி, ஒரு அபூர்வ கிரக அணிவகுப்பு நடக்கவுள்ளது என ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிகழ்வின் போது, ஆறு கிரகங்கள் - புதன், செவ்வாய் , வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் - சூரியனைச் சுற்றி வரும்போது ஒரு நேர்கோட்டில் வரவுள்ளது. குறுகிய காலத்திற்கு தெரியும் இந்த அதிசய அணிவகுப்பை தொலைநோக்கிகள் அல்லது உயர்-சக்தி தொலைநோக்கிகள் போன்ற சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பார்க்கலாம். starwalk.spaceஇன் அறிக்கைப்படி, இந்த கிரக அணிவகுப்பு ஜூன்-3 அன்று சூரிய உதயத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் பரவலாகக் தெரியும்.
கிரக அணிவகுப்பு உலகம் முழுவதும் தெரியும்
உலகம் முழுவதிலும் தெரிந்தாலும், பிராந்தியத்தைப் பொறுத்து தெரிவுநிலை மாறுபடலாம். உதாரணமாக, சாவ் பாலோவில் வசிப்பவர்கள் மே 27 அன்று 43 டிகிரி ஸ்கை செக்டரில் இந்த அண்ட நிகழ்வைக் காண முடியும். சிட்னியில், இது மே 28 அன்று 59 டிகிரி அளவில் வானத்தில் தென்படும். அதே நேரத்தில் நியூயார்க்கர்கள் ஜூன் 3ஆம் தேதி இந்த காட்சியைக் காண எதிர்பார்க்கலாம். ஜூன் 3 நிகழ்வைத் தவறவிட்டவர்களுக்கு, ஆகஸ்ட் 28 ஆம் தேதி மற்றொரு கிரங்கங்களின் அணிவகுப்பு வரிசையில் உள்ளது. புதன், வீனஸ், செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றைக் கொண்ட இன்னும் சிறப்பான ஏழு-கோள் சீரமைப்பு பிப்ரவரி 28, 2025இல் அமைக்கப்படவுள்ளது.