NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவிலும் அறிமுகமாகும் பிக்சல் வாட்ச், வெளியீட்டை உறுதி செய்த கூகுள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவிலும் அறிமுகமாகும் பிக்சல் வாட்ச், வெளியீட்டை உறுதி செய்த கூகுள்
    இந்தியாவிலும் அறிமுகமாகும் பிக்சல் வாட்ச், வெளியீட்டை உறுதி செய்த கூகுள்

    இந்தியாவிலும் அறிமுகமாகும் பிக்சல் வாட்ச், வெளியீட்டை உறுதி செய்த கூகுள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 09, 2023
    03:09 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்தாண்டு பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் தங்களுடைய முதல் ஸ்மார்ட் வாட்ச்சான பிக்சல் வாட்ச்சையும் வெளியிட்டது கூகுள். அதனைத் தொடர்ந்து தற்போது தங்களுடைய அடுத்த ஸ்மார்ட் வாட்ச்சான பிக்சல் வாட்ச் 2வை அடுத்த மாதம் வெளியிடவிருக்கிறது கூகுள்.

    தங்களுடைய புதிய ஸ்மார்ட்போன் சீரிஸான பிக்சல் சீரிஸ் 8 உடன் இந்தப் புதிய பிக்சல் வாட்ச் 2வை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது கூகுள்.

    கடந்தாண்டு வெளியான முதல் ஸ்மார்ட் வாட்ச்சை உலகளவில் பல்வேறு சந்தைகளில் அந்நிறுவனம் வெளியிட்ட போதிலும், இந்தியாவில் அதனை விற்பனைக்கு கூகுள் கொண்டு வரவில்லை.

    ஆனால், தற்போது வெளியாகவிருக்கும் பிக்சல் வாட்ச் 2வை, அமெரிக்காவில் வெளியிட்ட பிறகு இந்தியாவில் வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    கூகுள்

    எப்போது வெளியாகிறது பிக்சல் வாட்ச் 2? 

    அமெரிக்காகவில் அக்டோபர் 4ம் தேதி பிக்சல் வாட்ச் 2வை வெளியிடவிருக்கிறது கூகுள். அதனைத் தொடர்ந்து, அக்டோப்ர 5ல் இந்தியாவில் அந்த வாட்ச்சை வெளியிடவிருப்பதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    1.2 இன்ச் OLED டிஸ்பிளே, ஸ்னாப்டிகாரன் W5 ப்ராசஸர், 2GB ரேம், 32GB eMMC ஸ்டோரேஜ், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 306mAh பேட்டரி, 4G மற்றும் UWB வசதி ஆகிய வசதிகளுடன் புதிய பிக்சல் வாட்ச் 2வை வெளியிடவிருக்கிறது கூகுள்.

    முதல் பிக்சல் வாட்ச்சை இந்திய மதிப்பில் ரூ.30,000-க்கும் மேலான விலையில் கடந்தாண்டு வெளியிட்டிருந்தது கூகுள். புதிய ஸ்மார்ட் வாட்ச்சை பல்வேறு வகையிலும் அந்நிறுவனம் மேம்படுத்தியிருக்கும் நிலையில், அதனை விடக் கூடுதல் விலையிலேயே புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    கேட்ஜட்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கூகுள்

    சென்னையில் உள்ள கூகுள் CEO சுந்தர் பிச்சையின் வீடு சினிமா நடிகருக்கு விற்கப்பட்டது!  சென்னை
    'பிங்' சேவையை வழங்கும் முடிவில் இருந்து பின்வாங்கியது சாம்சங்.. ஏன்? சாம்சங்
    கூகுள் பிக்சல் 7a.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    கூகுளின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கிறதா மத்திய அரசு? இந்தியா

    கேட்ஜட்ஸ்

    விலை குறைவான AR/VR ஹெட்செட்டை உருவாக்கி வரும் ஆப்பிள்! ஆப்பிள்
    இந்தியாவில் வெளியானது புதிய ஷாவ்மி பேடு 6.. என்னென்ன வசதிகள்? டேப்லட்
    நத்திங் போன் (2)-வில் என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது வெளியீடு? ஸ்மார்ட்போன்
    இந்தியாவில் வெளியானது புதிய ஃபையர்-போல்ட் அல்டிமேட் ஸ்மார்ட்வாட்ச் தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025