Loading...
நண்பர்களுடன் சேர்ந்து செலவு செய்த பணத்தை பிரிக்க கவலையா? Paytm-ன் புதிய கலக்கல் வசதி
'Split Bills' என்ற புதிய வசதியை பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

நண்பர்களுடன் சேர்ந்து செலவு செய்த பணத்தை பிரிக்க கவலையா? Paytm-ன் புதிய கலக்கல் வசதி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 30, 2026
11:11 am

செய்தி முன்னோட்டம்

நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் போதோ அல்லது உணவகங்களுக்கு சென்று செலவு செய்யும் போதோ, யார் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை கணக்கிடுவதில் நிலவும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் 'Split Bills' என்ற புதிய வசதியை பேடிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த வசதி மூலம், பயனர்கள் தங்கள் குழு செலவுகளை ஆப் மூலமாகவே கண்காணித்து, பிரித்து, கணக்குகளை தீர்த்துக்கொள்ள முடியும். குறிப்பாக கல்லூரி மாணவர்கள், இளம் ஊழியர்கள், ஜென்-Z பயனர்கள் மற்றும் அடிக்கடி நண்பர்களுடன் சேர்ந்து பயணம் செய்வோர், பிறந்தநாள் விழாக்கள், உணவு ஆர்டர்கள், திரைப்பட கட்டணங்களை பகிர்ந்துகொள்வோரை இலக்காக கொண்டு இந்த அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயல்முறை

ஸ்பிளிட் பில்ஸ் எவ்வாறு செயல்படுகிறது?

பேடிஎம் ஆப்-ஐ திறந்து, 'Pay Anyone' பகுதிக்கு சென்று 'Split Bills' என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

புதிய குழுவை உருவாக்கி (பயணம், வீடு, தம்பதியர் அல்லது இதர) உறுப்பினர்களை சேர்க்கலாம்.

செலவிட்ட மொத்த தொகையை பதிவு செய்து, உணவகச் செலவு, பயணம், ஷாப்பிங் போன்ற பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்தத் தொகையைச் சமமாகவோ, குறிப்பிட்ட சதவீத அடிப்படையிலோ அல்லது தொகையின் அடிப்படையிலோ பிரித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

வசதிகள்

இதர செயலி மற்றும் ரொக்க பணப் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்

பேடிஎம் யுபிஐ தவிர்த்து, பிற யுபிஐ செயலிகள், கிரெடிட் கார்டுகள் அல்லது ரொக்கமாக செய்த செலவுகளையும் இதில் பதிவு செய்ய முடியும்.

கணக்குகளை தீர்க்க நேரடியாக பேடிஎம் யுபிஐ மூலம் பணம் அனுப்பலாம் அல்லது ஆப்-க்கு வெளியே பணம் செலுத்தியிருந்தால் அதனை 'Settled' என மாற்றிக் கொள்ளலாம்.

மேலும், நிலுவைத் தொகையை நினைவூட்ட 'Payment Reminders' அனுப்பும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பயனர்களின் அனைத்து நிதித் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், தங்களின் செயலியை ஒரு முழுமையான 'நிதி வாழ்க்கைச் செயலியாக' மாற்றும் நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பேடிஎம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT