NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 3: அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 3: அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன? 
    சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட தருணம்

    வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 3: அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன? 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 14, 2023
    03:01 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 3 விண்கலம். குறிப்பிடப்பட்டுள்ள பாதையில் பயணப்பட்டு, 40 நாட்களுக்கு பிறகு,நிலவில் தரையிறங்கும்.

    இந்தியாவின் பெருமைமிகு தொழில்நுட்ப வளர்ச்சியாக பார்க்கப்படும், இந்த சந்திராயன்-3 திட்டத்தில் என்னென்ன உபகரணங்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

    சந்திராயன்-3 விண்கலமானது ப்ரொபல்ஷன் மாடியூல், லேண்டர் மாடியூல் மற்றும் ரோவர் ஆகிய பயண உபகரணங்களைக் கொண்டிருக்கிறது.

    இதில் ப்ரொபல்ஷன் மாடியூலானது, விண்கலத்தை நிலவின் மேலே, 100 கிமீ சுற்றுவட்டப் பாதை வரை எடுத்துச் செல்லும்.

    அங்கிருந்து லேண்டரானது, தனியே பிரிந்து நிலவில் தரையிறங்கத் தொடங்கும்.

    அனைத்தும் திட்டமிட்டபடி சரியாக நடைபெறும் பட்சத்தில், நிலவின் தென்துருவப் பகுதியில் மென் தரையிறக்கத்தை சாத்தியப்படுத்திய முதல் திட்டமாக சந்திராயன்-3 பெயர் பெரும்.

    card 2

    என்னென்ன அறிவியல் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது?

    லேண்டரில், நிலவின் நிலஅதிர்வை அளவிடும் கருவியுடன் சேர்த்து மொத்தம் நான்கு அறிவியல் உபகரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    அதில், நிலவின் மேற்பரப்பின் வெப்பத்தை அளவிடும் Chandra's Surface Thermophysical Experiment கருவி, நிலவின் இயக்கத்தை அறிந்து கொள்ளும் வகையிலான நாசாவின் LASER Retroreflector Array மற்றும் நிலவின் மேற்பரப்பில் ப்ளாஸ்மாவின் அடர்த்தியை அளவிடும் Langmuir Probe, ஆகிய கருவிகள் இடம்பெற்றிருக்கின்றன.

    லேண்டருடன் அனுப்பப்படும் ரோவரில், Alpha Particle X-ray Spectrometer மற்றும் LASER Induced Breakdown Spectroscope ஆகிய கருவிகள் இடம்பெற்றிருக்கின்றன.

    இவை நிலவின் மேற்பரப்பில் இருக்கும் கற்கள், பாறைகள் மற்றும் மண்துகள்களை ஆராய்ந்து, அவை என்ன விதமான இரசாயனத் துகள்கள் மற்றும் கலவைகளால் ஆகியிருக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சந்திரயான் 3

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான்
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான்
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025