யூனியன் பட்ஜெட்; பான் கார்ட்டை இனி பொது அடையாள அட்டையாக பயன்படுத்தலாம்!
பட்ஜெட் தாக்கல் 2023-ல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பான் கார்டை பொது அடையாள அட்டையாக மாற்றப்படும் என அறிவித்துள்ளார். யூனியன் பட்ஜெட் தாக்கல் 2023-2024 இன் படி பல்வேறு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார். அதில், ரயில்வே, விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கான நிதியை அறிவித்த அவர், வருங்காலங்களில் 1 கோடி விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்றார். அடுத்து முக்கியமாக மாதம் வருமானம் வாங்கப்படும் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை என மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் சீதாராமன் கூறினார்.
யூனியன் பட்ஜெட் 2023; பான் கார்டு எந்தெந்த சேவைகளுக்கு இனி பயன்படுத்தலாம்?
தொடர்ந்து, பான் கார்டு இனி பொது அடையாள அட்டையாக அறிவிக்கப்படுகிறது என கூறியுள்ளார். ஆதார், பான், டிஜிலாக்கர் முறைகள், தனிநபர் பயன்பாட்டுக்காக பிரபலப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். மேலும், வங்கிகளின் கேஒய்சி(KYC) நடைமுறை எளிதாக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்மூலம், ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்று இனி பான் கார்டை அடையாள அட்டையாகவும், முகவரி ஆதாரமாகவும் பயன்படுத்த முடியும். தொடர்ந்து, அனைத்து அரசு சேவைகளுக்கும் அடையாள அட்டையாக பான் அட்டை பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்தார். ஏப்ரல் 1 முதல் சிறு குழு நிறுவனங்களுக்கு பிணையில்லாக் கடன் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.