NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவில் வெளியானது ஓப்போவின் புதிய 'ஃபைண்டு N3 ஃப்ளிப்' ஸ்மார்ட்போன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் வெளியானது ஓப்போவின் புதிய 'ஃபைண்டு N3 ஃப்ளிப்' ஸ்மார்ட்போன்
    இந்தியாவில் வெளியானது ஓப்போவின் புதிய 'ஃபைண்டு N3 ஃப்ளிப்' ஸ்மார்ட்போன்

    இந்தியாவில் வெளியானது ஓப்போவின் புதிய 'ஃபைண்டு N3 ஃப்ளிப்' ஸ்மார்ட்போன்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 13, 2023
    11:33 am

    செய்தி முன்னோட்டம்

    தங்களுடைய 'ஃபைண்டு N2 ஃப்ளிப்' ஸ்மார்ட்போன் மாடலின் அப்டேட்டட் வெர்ஷனாக 'ஃபைண்டு N3 ஃப்ளிப்' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது ஓப்போ.

    புதிய டிசைன், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுவது போலான அலர்ட் ஸ்லைடர் மற்றும் இன்ன பிற புதிய அப்டேட்களுடன் வெளியாகியிருக்கிறது ஓப்போ ஃபைண்டு N3 ஃப்ளிப்.

    120Hz ரெப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சத்தைக் கொண்ட 6.80 இன்ச் உட்பக்க திரையையும், 60Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 900 நிட்ஸ் அதிபட்த வெளிச்சத்தைக் கொண்ட 3.26 இன்ச் வெளிப்புற திரையையும் கொண்டிருக்கிறது இந்தப் புதிய ஸ்மார்ட்போன்.

    -20 டிகிரி செல்சியஸ் முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை அதீத வெப்பம் மற்றும் குளிரைத் தாங்கம் வகையில் புதிய ஸ்மார்ட்போனை வடிவமைத்திருக்கிறது ஓப்போ.

    ஓப்போ

    ஓப்போ ஃபைண்டு N3 ஃப்ளிப்: ப்ராசஸர் மற்றும் விலை 

    இந்த புதிய N3 ஃப்ளிப்பில் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது ஓப்போ. மேலும், 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட ஒரேயொரு வேரியன்டாக மட்டுமே வெளியாகியிருக்கிறது.

    இந்த N3 ஃப்ளிப்பில், பின்பக்கம் 50MP முதன்மைக் கேமரா, 32MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 48MP வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று கேமராக்கள் கொண்ட செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம், 32MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 13ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 13.2 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் இந்த N3 ஃப்ளிப் மாடலுக்கு 4 வருட இயங்குதள அப்டேட் மற்றும் 5 வருட பாதுகாப்பு அப்டேட்களை வழங்கவிருக்கிறது ஓப்போ.

    ரூ.94,999 விலையில் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது ஓப்போ ஃபைண்டு N3 ஃப்ளிப் ஸ்மார்ட்போன்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓப்போ
    ஸ்மார்ட்போன்
    கேட்ஜட்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஓப்போ

    இந்த ஜூலை மாதம் இந்தியாவில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள், பகுதி 2 ஸ்மார்ட்போன்
    எப்படி இருக்கிறது 'ஓப்போ ஃபைண்டு N2 ஃப்ளிப்'?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    இந்தியாவில் வெளியானது ஓப்போ ரெனோ 10 5G சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஸ்மார்ட்போன்
    ரூ.9,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்த சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் சீனா

    ஸ்மார்ட்போன்

    மூன்று விதமான S23 FE ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவிருக்கும் சாம்சங் சாம்சங்
    அக்டோபரில் புதிய பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருக்கும் கூகுள் கூகுள்
    இணையத்தில் கசிந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் கேட்ஜட்ஸ்
    பேடு 2 டேப்லட் மற்றும் C53 ஸ்மார்ட்போனை வெளியிட்டது ரியல்மீ ரியல்மி

    கேட்ஜட்ஸ்

    இன்றைய 'கேலக்ஸி அன்பேக்டு' நிகழ்வில் வெளியாகவிருக்கிறது சாம்சங்கின் ஃப்ளாக்ஷிப் டேப்லட் சாம்சங்
     வெளியானது சாம்சங் கேலக்ஸி 'ஃப்ளிப் 5' மற்றும் 'ஃபோல்டு 5' ஸ்மார்ட்போன்கள்  சாம்சங்
    கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் 'கேலக்ஸி டேப் S9 சீரிஸ்' டேப்லட்களை அறிமுகப்படுத்தியது சாம்சங் சாம்சங்
    கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி வாட்ச் சீரிஸ் 6 ஸ்மார்ட்வாட்ச்களை அறிமுகப்படுத்தியது சாம்சங் சாம்சங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025