NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / டெவலப்பர்கள் மாநாட்டில் ஓபன்ஏஐ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிமுகங்கள் மற்றும் அறிவிப்புகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெவலப்பர்கள் மாநாட்டில் ஓபன்ஏஐ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிமுகங்கள் மற்றும் அறிவிப்புகள்
    டெவலப்பர்கள் மாநாட்டில் ஓபன்ஏஐ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிமுகங்கள் மற்றும் அறிவிப்புகள்

    டெவலப்பர்கள் மாநாட்டில் ஓபன்ஏஐ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிமுகங்கள் மற்றும் அறிவிப்புகள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 07, 2023
    10:51 am

    செய்தி முன்னோட்டம்

    சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனம், நேற்று முதல் முறையாக டெவலப்பர்கள் மாநாட்டு நிகழ்வு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது. இந்த நிகழ்வில் புதிய அறிவிப்புகள் மற்றும் அறிமுகங்கள் பலவற்றையும் அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

    கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தான் சாட்ஜிபிடியை முதன்முதலில் வெளியிட்டது ஓபன்ஏஐ. வெளியாகி இரண்டு மாதங்களிலேயே 100 மில்லியன் பயனாளர்களைக் கடந்து சாதனை படைத்திருந்தது அந்த சாட்பாட்.

    மேலும், சாட்ஜிபிடி தொடர்பான புதிய API-களைக் கட்டமைக்க இரண்டு மில்லியன் டெவப்பர்களையும் சாட்ஜிபிடி ஈர்த்ததாக நேற்றைய டெவலப்பர்கள் மாநாட்டில் பதிவு செய்திருக்கிறார் ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன்.

    ஓபன்ஏஐ

    ஓபன்ஏஐயின் புதிய அறிவிப்புகள்: 

    நேற்றைய நிகழ்வில் புதிய மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டாக ஜிபிடி-4 டர்போ மாடலை வெளியிட்டது ஓபன்ஏஐ. இத்துடன் பல்வேறு புதிய API-களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

    டெவலப்பர்கள் தங்களுடைய தயாரிப்புகளின், ஓபன்ஏஐயின் டெக்ஸ்ட்-டூ-இமேஜ் மாடலான டால்-இ 3யை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய API-யை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    மேலும், டால்-இ 3யை முதற்கட்டமாக சாட்ஜிபிடி மற்றும் பிங் சாட் சாட்பாட்களிலும் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஓபன்ஏஐ.

    டால்-இ 3 வசதியைப் பயன்படுத்திக் கொள்ள ஒரு புகைப்பட உருவாக்கத்துக்கு 0.04 டாலர்களை (இந்திய மதிப்பில் 3.33 ரூபாய்) கட்டணமாக நிர்ணயித்திருக்கிறது அந்நிறுவனம்.

    செயற்கை நுண்ணறிவு

    தனிப்பட்ட சாட்ஜிபிடி பதிப்புகள் உருவாக்கம்: 

    செயற்கை நுண்ணறிவு சாட்பாட் சேவையில் புதிய திட்டமாக, யார் வேண்டுமானாலும் தங்களுக்கு பிடித்த வகையிலான சாட்ஜிபிடி பதிப்புகளை உருவாக்க முடியும் வகையிலான வசதியை அளிப்பதாக அறிவித்திருக்கிறது ஓபன் ஏஐ.

    இப்படி சாட்ஜிபிடியின் தனிப்பட்ட பதிப்புகளை உருவாக்க கோடிங் அறிவு தேவையில்லை, 'யார் வேண்டுமானாலும்' அதனை உருவாக்க முடியும் என்பது தான் அதன் சிறப்பம்சம்.

    ஆம், நம்முடைய தனிப்பதிப்பு சாட்ஜிபிடி சாட்பாட் எப்படி இருக்க வேண்டும், என்ன வகையான பயன்பாட்டிற்காக அதனை உருவாக்குகிறோம் போன்ற தகவல்களை மட்டும் நாம் அளித்தால் போதும், சாட்ஜிபிடியே நமக்கா தனிப்பதிப்பு சாட்பாட்டை உருவாக்கிக் கொடுக்குமாம்.

    சாட்ஜிபிடி

    சாட்ஜிபிடி மூலம் பயனாளர்களுக்கு வருவாய்? 

    மேற்கூறிய வகையில் நாம் உருவாக்கும் தனிப்பதிப்பு சாட்ஜிபிடி சாட்பாட்டை நாம் மட்டும் பயன்படுத்தலாம் அல்லது பிறரது பயன்பாட்டிற்காக சாட்ஜிபிடி உருவாக்கியிருக்கும் பட்டியலிலும் பட்டியலிடலாம்.

    நாம் உருவாக்கிய தனிப்பதிப்பு சாட்ஜிபிடி சாட்பாட்டை பிற பயனாளர்களும் பயன்படுத்தும் நிலையில், அதற்கான வருவாயையும் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஓபன்ஏஐ நிறுவனம்.

    மொத்தத்தில், செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களின் பயன்பாட்டை ஓபன்ஏஐ நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது என்பது மட்டும் உறுதி.

    ஆனால், எதன் அடிப்படையில் அதன் வருவாய்ப் பகிர்வு இருக்கும், அனைவரும் உருவாக்கும் வகையிலான தனிப்பதிப்பு சாட்பாட் வசதி எப்படி இருக்கும் என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாட்ஜிபிடி
    செயற்கை நுண்ணறிவு
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சாட்ஜிபிடி

    "AI-யை நெறிமுறைப்படுத்துவது அவசியம்" - சுந்தர் பிச்சை!  செயற்கை நுண்ணறிவு
    ChatGPT-யை காலி செய்ய வரும் எலான் மஸ்க்கின் TruthGPT!  எலான் மஸ்க்
    பாதுகாப்பு குறைபாடுகள் நிறைந்த AI சாட்பாட்கள்.. சுட்டிக்காட்டிய இஸ்ரேல் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    'ChatGPT மனிதர்களுக்கு மாற்றா'... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் பதில்!  செயற்கை நுண்ணறிவு

    செயற்கை நுண்ணறிவு

    பதிவுகளை எழுத AI கருவி, புதிய வசதியை சோதனை செய்யும் LinkedIn சமூக வலைத்தளம்
    பிங் தேடுபொறியுடன் இணைய வசதியைப் பெறும் சாட்ஜிபிடி சாட்ஜிபிடி
    புதிய AI சாதனத்தை உருவாக்கியிருக்கும் முன்னாள் ஆப்பிள் ஊழியர்கள் கேட்ஜட்ஸ்
    பிரபலங்களை வைத்து AI உதவியுடன் உருவாக்கப்பட்டு வைரலான ஸோமாட்டோவின் நகைச்சுவைக் காணொளி  வணிகம்

    தொழில்நுட்பம்

    வாடிக்கையாளர்களுக்கு உதவ புதிய AI சாட்பாட் ஒன்றை உருவாக்கி வரும் உபர் ஈட்ஸ் செயற்கை நுண்ணறிவு
    புதிய ஸ்மார்ட்வாட்ச் மற்றும் இயர்பட்ஸை அறிமுகப்படுத்தவிருக்கும் நத்திங்கின் துணை பிராண்டான CMF கேட்ஜட்ஸ்
    இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள் இந்தியா
    AI தொழில்நுட்பத்துடன் கூடிய தேடுபொறி வசதியை இந்தியாவிற்கும் விரிவுபடுத்திய கூகுள் கூகுள்

    தொழில்நுட்பம்

    Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 1-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்
    Google-க்கு வயது 25, பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யமாக வளர்ந்த கதை! கூகுள்
    தேர்தல்களின் போது AI கருவிகளினால் போலி தகவல்கள் பரவுவது அதிகரிக்குமா? செயற்கை நுண்ணறிவு
    விண்வெளியைத் தொடர்ந்து ஆழ்கடலை ஆய்வு செய்ய சமுத்திரயான் திட்டத்திற்கு தயாராகும் இந்தியா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025