
OpenAI யின் புதிய அறிமுகம் "Sora": TikTok-க்கிற்கு சவால் விடும் புதிய AI வீடியோ செயலி
செய்தி முன்னோட்டம்
OpenAI, தனது புதிய தலைமுறை AI வீடியோ மாதிரி "Sora 2" மற்றும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட புதிய சமூக ஊடக செயலியான "Sora"வை அறிமுகப்படுத்தியுள்ளது. TikTok போன்று செயல்படும் இந்த செயலியின் மூலம், பயனர்கள் குறுகிய AI உருவாக்கப்பட்ட வீடியோக்களை உருவாக்கி, பகிர முடியும். ஆனால், பாரம்பரிய சமூக ஊடகங்களிலிருந்து வேறுபட்டு, இது உண்மைபோன்ற காட்சிகளை உருவாக்கும் மேம்பட்ட AI உள்நுணுக்கங்களைக் கொண்டுள்ளது. Sora, பயனர்களுக்கு அவர்களே உருவாக்கப்பட்ட காட்சிகளில் நடிக்க அனுமதிக்கிறது. இது சமூக ஊடகங்களைப் புதியதொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
முக்கிய அம்சங்கள் #1
Cameo (கேமியோ) அம்சம்
Sora-வின் தனித்துவமான அம்சங்களில் Cameo முக்கியமானது. இது, பயனர்கள் தங்கள் முகத்தையும் குரலையும் பயன்படுத்தி, AI உருவாக்கிய வீடியோக்களில் நேரடியாக தோன்றுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. செயல்முறை: பயனர் ஒருமுறை பயன்படுத்தும் வீடியோ மற்றும் ஆடியோ மூலம் தங்களை சரிபார்க்க வேண்டும். இது ஆள்மாறாட்டத்தை தடுக்கும் மற்றும் உரிமையை உறுதி செய்யும்.
முக்கிய அம்சங்கள் #2
Remix (ரீமிக்ஸ்) வசதி
பயனர்கள் தங்கள் வீடியோக்களை நண்பர்களோ அல்லது பொதுமக்களோ மறுபயன்பாடு செய்ய அனுமதிக்கலாம். இதில், படம் பயன்படுத்தப்பட்ட நபருக்கு இணையான உரிமை வழங்கப்படுகிறது. மேலும் விரும்பினால் அதை எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம்.
முக்கிய அம்சங்கள் #3
வெளியீட்டு நிலை
Sora, iOS பயன்பாடாக, தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே இப்போது கிடைக்கிறது. Android பதிப்பு எப்போது வருவது குறித்து தகவல் இல்லை. ChatGPT Pro பயனர்கள், அழைப்பிதழ் இல்லாமலே Sora 2 Pro மாடலை முயற்சிக்கலாம். வீடியோக்கள் TikTok, Instagram Reels போன்ற ஊட்டத்தில் (feed) பகிர முடியும்.
பாதுகாப்பு அம்சங்கள்
Soraவின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்:
அல்காரிதம் மற்றும் தனிப்பயனாக்கம்: Sora, TikTok போன்று ஒரு discovery feed அல்காரிதம் கொண்டது. அதாவது, பயனர் நடத்தை மற்றும் இருப்பிடத்தைப் பொருத்து காணொளிகளை பரிந்துரைக்கும். ஆனால், தனிப்பயனாக்கத்திலிருந்து விலகும் விருப்பமும் அளிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகள்: Sora, ChatGPT வழியாக பெற்றோர் கட்டுப்பாடுகளையும் வழங்குகிறது. அதாவது, வெறுமனே உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தாமல், குழந்தையை யார் தொடர்பு கொள்ளலாம் என்பதை பெற்றோர்களால் கட்டுப்படுத்த முடியும்
எதிர்கால பாதைகள்
எதிர்கால பாதைகள் மற்றும் சவால்கள்:
AI உருவாக்கும் உள்ளடக்கம் என்பதாலேயே, பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் எழும் அபாயம் உள்ளது. Deepfake துஷ்பிரயோகங்கள், தவறான தகவல்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் வீடியோக்கள் குறித்து பயனர்களிடத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. OpenAI, அதற்கான சரிபார்ப்பு முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது என தெரிவிக்கிறது. TikTok, Instagram Reels போன்றவற்றுடன் நேரடியாக போட்டியிட்டாலும், Sora மிக அதிகமான AI உருவாக்க திறன்களுடன் உருவாக்கத்தின் மேல் கவனம் செலுத்தும் தனித்துவமான செயலியாக இருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Sound on. pic.twitter.com/QHDxq6ubGt
— OpenAI (@OpenAI) September 30, 2025