
குறைபாடுகளைக் கண்டறிபவர்களுக்கு 20,000 டாலர் சன்மானம், OpenAI நிறுவனம் அறிவிப்பு!
செய்தி முன்னோட்டம்
தங்களது AI சாட்பாட்டான சாட்ஜிபிடி-யில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிபவர்களுக்கு 20,000 டாலர்கள் வரை சன்மானம் அளிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம்.
வளர்ந்த டெக் நிறுவனங்கள் எல்லாம் தங்கள் சேவைத் தளத்தில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகள் மற்றும் குறைகளை கண்டறிபவர்களுக்கு சன்மானம் கொடுக்கும் வகையில் பக் பவுண்டி ப்ரோகிராம் என ஒரு திட்டத்தை வைத்திருப்பார்கள்.
தற்போத அதனை ஓபன்ஏஐ நிறுவனமும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது. இதன் மூலம், இந்தத் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் வாயந்த யார் வேண்டுமானாலும் அந்த சாட்பாட்டில் இருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி சன்மானம் பெற முடியும்.
தொழில்நுட்பம்
பாதுகாப்புக் குறைபாடுகள்:
ஒரு செயலியோ அல்லது தொழில்நுட்பம் சார்ந்த எந்தவொரு விஷயமத்திலும், அதனை உருவாக்கியவரே அறியாத பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கும்.
அதனைக் களைவதற்காக இந்த விதமான முன்னெடுப்புகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்னெடுப்பது வழக்கம்.
சாட்ஜிபிடி-யில் இருக்கும் குறைபாடுகளைக் கண்டறிபவர்களுக்கு, அதன் தன்மைக்கு ஏற்ப 200 டாலர்களில் இருந்து 20,000 டாலர்கள் வரை (இந்திய மதிப்பில் சுமார் 16.50 லட்சம் ரூபாய்) சன்மானம் அளிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது ஓபன்ஏஐ.
"பாதுகாப்பான மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒரு AI மாடலை உருவாக்குவதற்கு இந்த முன்னெடுப்பு மிகவும் அவசியமானது" என இந்த திட்டம் குறித்த வலைத்தள அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறார் அந்நிறுவனத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி மேத்யூ நைட்.