
இந்தியாவில் வெளியானது ஒன்பிளஸின் நார்டு 3 மற்றும் நார்டு CE 3 ஸ்மார்ட்போன்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தங்களது புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன்களான நார்டு 3 மற்றும் நார்டு CE 3 ஆகிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது ஒன்பிளஸ்.
120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.74-இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கிறது நார்டு 3. மேலும், ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்OS 13.1-ஐ பெற்றிருக்கிறது நார்டு 3.
இந்த நார்டு 3-த்து மூன்று வருட இயங்குதள அப்டேட்டும், 4 வருட பாதுகாப்பு அப்டேட்டும் வழங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது ஒன்பிளஸ்.
மீடியாடெக் டைமன்சிட்டி 9000 ப்ராசஸருடன் வெளியாகியிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன், 5000mAh பேட்டரியைக் கொடுத்திருக்கிறது ஒன்பிளஸ்.
இதன் 8GB ரேம்+128GB ஸ்டோரேஜ் வேரியன்டானது ரூ.33,999-க்கும், 16GB ரேம்+256GB ஸ்டோரேஜ் வேரியன்டானது ரூ.37,999 விலையிலும் வெளியாகியிருக்கிறது.
ஒன்பிளஸ்
ஒன்பிளஸ் நார்டு CE 3:
CE 3 மாடலும் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.74-இன்ச் AMOLED டிஸ்பிளேவையே கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நார்டு 3-யில் கொடுக்கப்பட்ட அதே அம்சங்களை நார்டு CE 3-யிலும் கொடுத்திருக்கிறது ஒன்பிளஸ்.
ஆனால், ப்ராசஸர் மட்டும் நார்டு 3-யை விட கொஞ்சம் பவர் குறைவான ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது. நார்டு CE 3-யில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 782 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கேமராவும் இரண்டு மொபைல்களிலும் 50MP ட்ரிபிள் கேமராவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
CE 3-யின் 8GB ரேம்+128GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை வேரியன்டானது ரூ.26,999 விலையிலும், 12GB ரேம்+256GB ஸ்டோரேஜ் கொண்ட டாப் எண்டானது ரூ.28,999 விலையிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
நார்டு 3-யானது ஜூலை 15 முதலும், நார்டு CE 3-யானது ஆகஸ்ட் முதலும் விற்பனை செய்யப்படவிருக்கிறது.