'ஓபன்' என்ற பெயரை தங்கள் ஃபோல்டபிள் போன்களுக்குப் பயன்படுத்தவிருக்கும் ஒன்பிளஸ்
செய்தி முன்னோட்டம்
சாம்சங் மற்றும் கூகுளைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனமும் புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன்களை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.
இந்த புதிய போனை 'ஒன்பிளஸ் ஃபோல்டு' என முன்னர் அந்நிறுவனம் குறிப்பிட்டு வந்த நிலையில், ஃபோல்டு என்ற பெயருக்கு பதிலாக புதிய பெயர்களை பரிசீலனை செய்திருக்கிறது.
ப்ரைம், விங், பீக் மற்றும் எட்ஜ் ஆகிய பெயர்களை அந்நிறுவனம் பரிசீலனை செய்த நிலையில், ஓபன் என்ற பெயரை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
பின்பக்கம் கேமரா ஐலாண்டு, ப்ளாட்டான பக்கவாட்டுப் பகுதிகள் என ஒரு ஸ்டைலான ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக புதிய ஓபனை உருவாக்கி வருகிறது ஒன்பிளஸ். இந்த போனில் அலர்ட் ஸ்லைடரை இடதுபக்கம் கொடுக்கவிருக்கிறதாம் அந்நிறுவனம்.
ஒன்பிளஸ்
ஒன்பிளஸ் ஓபன்: என்ன எதிர்பார்க்கலாம்?
முழுவதுமாக விரிந்த நிலையில் 7.8 இன்ச் டிஸ்பிளேவையும், மடங்கிய நிலையில் 6.3 இன்ச் டிஸ்பிளேவையும் புதிய ஓபன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து டிஸ்பிளேக்களும் AMOLED-ஆக இருப்பதற்கே வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த ஓபனில், குவால்காமின் தற்போதைய ஃப்ளாக்ஷபான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 ப்ராசஸரையே பயன்படுத்தவிருக்கிறது ஒன்பிளஸ்.
பின்பக்கம் 50MP முதன்மைக் கேமராவுடன் கூடிய ட்ரிபிள் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 32MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதிகளுடன் புதிய ஓபன் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியடவில்லை. எனினும், ஆகஸ்ட் இறுதியில் இந்த புதிய போன் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.