
டிசம்பரில் 5-ல் அறிமுகமாகும் ஒன்பிளஸின் ஃப்ளாக்ஷிப் 'ஒன்பிளஸ் 12' ஸ்மார்ட்போன்
செய்தி முன்னோட்டம்
தங்கள் நிறுவனத்தின் பத்தாவது ஆண்டுவிழாவைத் தொடர்ந்து, சீனாவில் டிசம்பர் 5ம் தேதியன்று தங்களது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12-ஐ அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம்.
அதனைத் தொடர்ந்த 2024ல் இந்தப் புதிய ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம். அடுத்த சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதைத் தொடர்ந்து, அந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
ஒன்பிளஸ் 11-ன் டிசனை பல வகைகளில் ஒத்திருக்கிறது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் டிசனை. பன்ச் ஹோல் கேமரா, இடதுபக்க அலர்ட் ஸ்லைடர், கேமரா மாடியூலுக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கும் பிளாஷ் லைட் உள்ளிட்ட டிசைன் அம்சங்களை நம்மால் பார்க்க முடிகிறது.
ஒன்பிளஸ்
ஒன்பிளஸ் 12: வசதிகள்
புதிய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் மாடலில், 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சத்தை கொண்ட 2K டிஸ்பிளேவைப் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளுடன் கூடிய 5,400mAh பேட்டரி, ஒன்பிளஸ் 12 மாடலில் கொடுக்கப்படவிருக்கிறது.
சோனியின் LYT-808 முதன்மைக் கேமராவும், 64MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்சும் ஒன்பிளஸ் 12ல் பயன்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கிறது ஒன்பிளஸ்.
ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 இயங்குதளத்துடன், குவால்காமின் ஃப்ளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ப்ராசஸரைக் கொண்டு வெளியாகவிருக்கிறது ஒன்பிளஸ் 12. இந்த 12 மாடலுடன், ஒன்பிளஸ் 12R மற்றும் ஒன்பிளஸ் வாட்ச் 2 ஆகியவற்றையும் வெளியீட்டையும் நாம் எதிர்பார்க்கலாம்.