OnePlus 11 v/s OnePlus 10 Pro; வேறுபாடுகள் என்ன?
ஒன்பிளஸ் நிறுவனம் பிப்ரவரி 7-ஆம் தேதி OnePlus 11 5G மொபைல் ஃபோனை உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே, இங்கு OnePlus 10 Pro உடன் OnePlus 11 இன் இரண்டு மாடல்களுக்கான வேறுபாட்டை பார்ப்போம். OnePlus 11, 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். OnePlus 10 Pro 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. OnePlus 11 கேமரா முன்பக்கம் 50 எம்பி கேமரா, 48 எம்பி பின் கேமரா உள்ளது. OnePlus 10 Pro வில் 48 மெகாபிக்சல் சோனி IMX789 சென்சார் உள்ளது. அல்ட்ரா வைட் சென்சாராக 50 மெகாபிக்சல் Samsung ISOCELL JN1 சென்சார் மற்றும் 8 எம்பி டெலிஃபோட்டோ கேமரா உள்ளது.
OnePlus 11 v/s OnePlus 10 Pro வித்தியாசங்கள் மற்றும் விலை விபரம்
இதில் 1440 பிக்சல்கள் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் , 12 ஜிபி ரேம், 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது. OnePlus 11 வில், octa-core பிராசஸ்சரில் இயங்கும். 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படும். இதிலும் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. விலை விபரங்கள் OnePlus 11, OnePlus 11 5G இன் விலை ரூ.55,000 முதல் ரூ.65,000 வரையில் இருக்கலாம். ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி 8ஜிபி ரேம் வேரியண்ட் விலை ரூ.66,900 ஆகவும் 12ஜிபி ரேம் விலை ரூ.71,900 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.