அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் சாம்சங் S23, ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன்கள்;
இந்தியாவில் தற்போது சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் நிறுவனம் தங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை வெளியிட தயாராக உள்ளனர். Samsung Galaxy S23 Ultra இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ் 23 மற்றும் கேலக்ஸி எஸ் 23 அல்ட்ரா போன்கள் வெளியிடப்படுகிறது. Galaxy S23 Ultra ஆனது 12MP அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் இரண்டு 10MP டெலிஃபோட்டோ சென்சார்கள் கொண்டிருக்கும். 200MP கேமரா பேக் உடன் வரும் என்று கூறப்படுகிறது. இது 1-120Hz Refresh rate-யை கொண்டுள்ளது, கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 மற்றும் 1,750-நிட்ஸ் Brightness உடன் AMOLED திரையைப் பெறும். 5,000mAh பேட்டரியுடன் கூடிய Snapdragon 8 Gen 2 SoC இன் ஓவர்லாக் செய்யப்பட்ட பதிப்பை கொண்டுள்ளது.
சூப்பரான அம்சங்களுடன் வெளிவரும் Samsung Galaxy S23, OnePlus 11
OnePlus 11 OnePlus 11 , OnePlus 11R, OnePlus Pad மற்றும் பல தயாரிப்புகளுடன் பிப்ரவரி 7 ஆம் தேதி வரும் . இதில், ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரேஷன் 1 செயலி மூலம் இயக்கப்படும். இதில் Adreno 730 கிராபிக்ஸுக்காக தரப்படும். 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் 11 ஆர் அடிப்படையில் கிடைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. OnePlus 11R ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.7-இன்ச் AMOLED திரையைக் கொண்டிருக்கும். கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 11ஆரில் 50MP + 12MP + 2MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா உள்ளது. இதன் பேட்டரி அளவு 5,000mAh ஆக இருக்கலாம். இது 100W வேகமான சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருக்கும்.