Loading...
வானில் நிகழும் 8 அரிய அதிசயங்கள்; 3 விண்கல் பொழிவு & சூப்பர்மூன்; பார்க்க வேண்டிய நேரங்கள்
நவம்பர் மாதத்தில் வானில் நிகழும் 8 அரிய அதிசயங்கள்

வானில் நிகழும் 8 அரிய அதிசயங்கள்; 3 விண்கல் பொழிவு & சூப்பர்மூன்; பார்க்க வேண்டிய நேரங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 02, 2026
05:50 pm

செய்தி முன்னோட்டம்

2026 நவம்பர் மாதத்தில் மூன்று முக்கிய விண்கல் பொழிவுகள் இரவு வானை அலங்கரிக்கவுள்ளன. தெற்கு டாரைடு விண்கல் பொழிவு நவம்பர் 4-5 தேதிகளிலும், வடக்கு டாரைடு நவம்பர் 11-12 தேதிகளிலும் தங்களது உச்சத்தை எட்டும். இவை இரண்டும் பிரகாசமான விண்கல் நெருப்புப் பந்துகளுக்குப் பெயர் பெற்றவை ஆகும். இதற்கிடையே, மணிநேரத்திற்கு 15 விண்கற்கள் வரை மிகவேகமாகப் பாயும் லியோனிடு விண்கல் பொழிவு நவம்பர் 17-18 நள்ளிரவில் உச்சமடையும்.

கோள்களின் சந்திப்பு

செவ்வாய் - வியாழன் கோள்களின் அரிய நெருக்கமான சந்திப்பு

நவம்பர் 16 ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக செவ்வாய் மற்றும் வியாழன் கோள்கள் வானில் மிக நெருக்கமாகக் காட்சியளிக்கும்.

இவ்விரு கோள்களும் வெறும் 1.2 டிகிரி இடைவெளியில் அமைந்திருப்பது போல் தோன்றும் என்பதால் இதை வெறும் கண்களாலும், பைனாகுலர் வழியாகவும் தெளிவாகப் பார்க்கலாம்.

மேலும், சூரியனின் மறைமுக ஒளியால் வழக்கமாக பார்க்க முடியாத புதன் கோள், நவம்பர் 20 அன்று சூரியனிடமிருந்து அதிகபட்ச விலகலைப் பெற்று அதிகாலையில் கிழக்கே தெளிவாகத் தெரியும்.

பீரவர் சூப்பர்மூன்

வானை ஒளிரச் செய்யும் பிரம்மாண்ட பீவர் சூப்பர்மூன்

நவம்பர் மாதத்தின் பௌர்ணமி நிலவு பாரம்பரியமாக பீவர் மூன் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு இந்நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் என்பதால், நவம்பர் 24 அன்று சூப்பர்மூனாக தோன்றி வழக்கத்தை விடப் பெரியதாகவும் பிரகாசமாகவும் காட்சியளிக்கும்.

உலகெங்கிலும் உள்ள மக்கள் அன்று மாலை நிலவு உதிக்கும் நேரத்தில் இந்த அபூர்வ நிலவைக் கண்டு ரசிக்கலாம்.

அதேபோல, யுரேனஸ் கோள் நவம்பர் 25 அன்று பூமிக்கு நேர்கோட்டில் வந்து இரவு முழுவதும் ஒளிரும்.

ADVERTISEMENT

வெள்ளி கிரகம்

ஆண்டின் மிக அதிக பிரகாசத்தில் மிளிரப்போகும் வெள்ளி கிரகம்

2026 ஆம் ஆண்டின் மிக பிரகாசமான நிலையை வெள்ளி கோள் வரும் நவம்பர் 27 அன்று எட்டவுள்ளது.

அதிகாலை கிழக்கே தோன்றும் இக்கோள், தனது அடர்ந்த மேகக்கூட்டங்களின் எதிரொளிப்புத் திறன் மற்றும் பூமிக்கு அருகில் உள்ள அமைவிடம் காரணமாக சுடரொளியாக மிளிரும்.

விடிவெள்ளி என்று அழைக்கப்படும் வெள்ளி கோளின் இந்த பிரகாசமான தோற்றம் வட மற்றும் தென் அரைக்கோள மக்கள் அனைவருக்கும் மிகத் தெளிவாகத் தெரியும்.

விண்வெளி ஆர்வலர்களுக்கு இந்த நவம்பர் மாதம் ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

ADVERTISEMENT