Page Loader
Nothing ஃபோன் 2A வரும் பிப்ரவரி 27 அன்று வெளியாகக்கூடும்
நத்திங் ஃபோன் 2A வரும் பிப்ரவரி 27 அன்று வெளியாகக்கூடும்

Nothing ஃபோன் 2A வரும் பிப்ரவரி 27 அன்று வெளியாகக்கூடும்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 02, 2024
09:14 am

செய்தி முன்னோட்டம்

நத்திங் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் புதிய படைப்பான ஃபோன் 2A சமீபத்தில் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் அகிஸ் எவாஞ்சலிடிஸ்-ஆல் யூட்யூபில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் அவர் வெளியீட்டு தேதி குறித்த எந்தவொரு தகவலையும் கூறாத நிலையில், தற்போது இந்த நத்திங் ஃபோன் 2A வரும் பிப்ரவரி 27 அன்று வெளியாகக்கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஃபோன் 2A ஆனது, செயல்திறன், கேமரா போன்றவற்றில் கவனம் செலுத்தும் என்றும், ஃபோன் (2) உடைய சில பிரபலமான அம்சங்களையும் இந்த புதிய அறிமுகம் உள்ளடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மற்ற Nothing ஃபிளாக்ஷிப் போன்களை விட இந்த புதிய சாதனம், பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஃபோன் 2A வெளியீடு தேதி