NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கவிருக்கிறது 'நத்திங் போன் (2a)' ஸ்மார்ட்போன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கவிருக்கிறது 'நத்திங் போன் (2a)' ஸ்மார்ட்போன்?
    என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கவிருக்கிறது 'நத்திங் போன் (2a)' ஸ்மார்ட்போன்?

    என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கவிருக்கிறது 'நத்திங் போன் (2a)' ஸ்மார்ட்போன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 30, 2023
    10:54 am

    செய்தி முன்னோட்டம்

    இரண்டு ஆண்டுகளில் இரண்டு ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்துக்குப் பிறகு, புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிடத் தயாராகி வருகிறது முன்னாள் ஒன்பிளஸ் சிஇஓ கார்ல் பெய் தலைமையிலான நத்திங் நிறுவனம்.

    'நத்திங் போன் (2a)' என்ற பெயரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் புதிய ஸ்மார்ட்போனை, 2024 பிப்ரவரி 27ம் தேதி நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகப்படுத்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    நத்திங் நிறுவனத்தின் பட்ஜெட் வெர்ஷனாக அறிமுகமாகவிருக்கும் இந்த ஸ்மார்ட்போனை, ஜப்பான், இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    நத்திங்

    நத்திங் போன் (2a): வசதிகள் 

    8GB/128GB மற்றும் 12GB/256GB ரேம் மற்றும் ஸ்டோரேஜ் சேர்க்கைகளில், ரூ.35,000 விலைக்குள் இந்தப் புதிய மொபைலை நத்திங் வெளியிட வாய்ப்பிருக்கிறது.

    இந்த போன் (2a)-விலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புதிய கிளிப் இன்டர்பேஸ் விளக்குகளைப் நத்திங் பயன்படுத்தவிருப்பதாக முன்பே தகவல்கள் இணையத்தில் கசிந்திருந்தன.

    பின்பக்கம் 50MP முதன்மைக் கேமரா மற்றும் 50MP அல்ட்ரா-வைடு சென்சாரையும், முன்பக்கம் 32MP செல்ஃபி கேமராவையும் பயன்படுத்தவிருக்கிறது நத்திங்.

    இத்துடன் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே, டைமன்சிட்டி மீடியாடெக் 7200 சிப்செட், ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்ட நத்திங் ஓஎஸ் 2.5 இயங்குதளம் மற்றும் 4,920mAh பேட்டரி ஆகிய வசதிகளுடன் புதிய போன் (2a) ஸ்மார்ட்போனை வெளியிடவிருக்கிறது நத்திங்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்மார்ட்போன்
    கேட்ஜட்ஸ்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    ஸ்மார்ட்போன்

    அறிமுகமானது ஸ்மார்ட்போன்களுக்கான குவால்காமின் ஃப்ளாக்ஷிப் சிப்செட், 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3' செயற்கை நுண்ணறிவு
    குவால்காமின் புதிய 'ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3' சிப்செட்டைக் கொண்டு வெளியாகவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் கேட்ஜட்ஸ்
    'கார் கிராஷ் டிடெக்ஷன்' வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்திய கூகுள் கூகுள்
    சீனாவில் புதிய X100 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் விவோ, இந்தியாவில் எப்போது? விவோ

    கேட்ஜட்ஸ்

    இந்தியாவில் வெளியானது புதிய விவோ V29 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விவோ
    வெளியானது 'சாம்சங் கேலக்ஸி S23 FE 5G' ஸ்மார்ட்போன்  சாம்சங்
    இந்தியாவில் வெளியானது கூகுளின் புதிய 'பிக்சல் 8 சீரிஸ்' ஸ்மார்ட்போன்கள் கூகுள்
    புதிய 'ஸ்மார்ட் பேண்டு 8 ஆக்டிவ்' ஸ்மார்ட் பேண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி சியோமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025