LOADING...
நோக்கியா நிறுவனத்தில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்: இந்தியக் குழுக்களுக்குப் பாதிப்பு; முழு விபரம்
நோக்கியா நிறுவனத்தில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்

நோக்கியா நிறுவனத்தில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்: இந்தியக் குழுக்களுக்குப் பாதிப்பு; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 27, 2026
08:28 pm

செய்தி முன்னோட்டம்

மைக்ரோசாஃப்ட், அமேசான் மற்றும் கூகுள் போன்ற பெருநிறுவனங்களைத் தொடர்ந்து, தற்போது பின்லாந்து நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான நோக்கியா தனது உலகளாவிய பணியாளர் எண்ணிக்கையில் பெரும் குறைப்பை அறிவித்துள்ளது. தனது ஒட்டுமொத்த பணியாளர்களில் சுமார் 20 சதவீதத்தை, அதாவது 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி முடிவினால் இந்தியாவில் உள்ள நோக்கியா ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னணி மற்றும் முக்கியத் தகவல்கள் இதோ:

வீழ்ச்சி

இந்தியாவின் விற்பனை வீழ்ச்சி

இந்தியாவில் நோக்கியாவின் வர்த்தகம் கடந்த ஆண்டை விட சரிவைச் சந்தித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், நோக்கியாவின் நிகர விற்பனை 15 சதவீதம் குறைந்து 393 மில்லியன் யூரோக்களாக (சுமார் ₹4,290 கோடி) சரிந்துள்ளது. முந்தைய ஆண்டில் இது 463 மில்லியன் யூரோக்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருவாய் இழப்பே பணிநீக்கத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

சீரமைப்பு

இந்தியத் தலைமை மாற்றங்கள்

மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்தியாவில் நோக்கியா தனது தலைமைப் பொறுப்புகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. சமர் மிட்டல்: ஏப்ரல் 1, 2026 முதல் இந்தியாவுக்கான பிசினஸ் லீடராக நியமிக்கப்பட்டுள்ளார். விபா மெஹ்ரா: இந்தியா கன்ட்ரி மேனேஜராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்தியத் தலைவர் தருண் சாப்ரா தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

Advertisement

காரணங்கள்

பணிநீக்கத்திற்கான காரணங்கள்

2023இல் நோக்கியாவின் கிளவுட் மற்றும் நெட்வொர்க் சேவைகள் பிரிவு, மொபைல் நெட்வொர்க் பிரிவுடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்பால் பல துறைகளில் ஒரே மாதிரியான வேலைகளைச் செய்யும் ஊழியர்கள் அதிகரித்துள்ளனர். செலவைக் குறைக்கவும், செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும் இந்தத் தேவையற்ற பணியிடங்கள் நீக்கப்பட உள்ளன. நோக்கியா நிறுவனம் உலகெங்கிலும் சுமார் 74,100 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 17,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த 8 ஆண்டுகளில் நோக்கியாவின் உலகளாவிய பணியாளர் எண்ணிக்கை 1.03 லட்சத்திலிருந்து 74,100 ஆகக் குறைந்துள்ளது. தற்போது ஐரோப்பாவிலும் (கிரீஸ், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ்) சுமார் 1,400 இடங்களைக் குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Advertisement