NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / இந்தியாவில் வெளியானது புதிய நாய்ஸ் 'ஏர் பட்ஸ் ப்ரோ SE'
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் வெளியானது புதிய நாய்ஸ் 'ஏர் பட்ஸ் ப்ரோ SE'
    இந்தியாவில் வெளியானது புதிய நாய்ஸ் 'ஏர் பட்ஸ் ப்ரோ SE'

    இந்தியாவில் வெளியானது புதிய நாய்ஸ் 'ஏர் பட்ஸ் ப்ரோ SE'

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 30, 2023
    10:19 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மின்சாதன தயாரிப்பு நிறுவனமான நாய்ஸ் (Noise), இந்தியாவில் புதிய 'ஏர் பட்ஸ் ப்ரோ SE' TWS ஹெட்போன்களை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவின் தொடக்க நிலை TWS ஹெட்போன்கள் சந்தையில் பிற ஹெட்போன்களுடன் போட்டியிடும் வகையில் இந்தப் புதிய ஏர் பட்ஸை வெளியிட்டிருக்கிறது நாய்ஸ்.

    நாய்ஸ் பிராண்டிங்குடன் மெட்டாலிக் ஃபினிஷ் கொண்ட கேஸைப் பெற்றிருக்கிறது நாய்ஸின் ஏர் பட்ஸ் ப்ரோ SE. லஸ்டர் பிளாக் மற்றும் சாம்பெய்ன் கோல்டு ஆகிய இரு நிறங்களில் வெளியாகியிருக்கிறது.

    உடற்பயிற்சி செய்யும் போது, வெளியே செல்லும் போதும் பயன்படுத்தும் வகையில் IPX5 வாட்டர் ரெசிஸ்டன்ட் ரேட்டிங்கைக் கொண்டிருக்கிறது இந்த புதிய ஏர் பட்ஸ். வழக்கம் போல், டச் கண்ட்ரோல்கள் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதிகளும் உள்ளன.

    நாய்ஸ்

    நாய்ஸ் ஏர் பட்ஸ் ப்ரோ SE: பிற வசதிகள் மற்றும் விலை 

    ஏர் பட்ஸானது முழுவதுமாக சார்ஜ் ஆக 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில், கேஸானது 90 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகிறது. 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரம் வரை ப்ளேபேக் செய்ய முடிகிறது.

    முழுமையான சார்ஜில் 7.5 மணி நேரப் பயன்பாட்டை வழங்கும் இந்தப் புதிய ஏர் பட்ஸானது, கேஸூடன் 45 மணி நேரப் பயன்பாட்டை வழங்குகிறது.

    ப்ளூடூத் 5.3 வசதியைக் கொண்டிருக்கும் இந்த பட்ஸானது 30dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சஸேஷன் வசதியையும் வழங்குகிறது.

    இந்தியாவில் ரூ.1,699 விலையில் வெளியாகியிருக்கும் இந்த ஏர் பட்ஸை, நாய்ஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஃப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் ஆர்டர் செய்ய முடியும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேட்ஜட்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கேட்ஜட்ஸ்

    இந்தியாவில் புதிய ரேஸர் 40 சீரிஸ் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது மோட்டோரோலா மோட்டோரோலா
    புதிய 'நியோ 7 ப்ரோ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது iQOO ஸ்மார்ட்போன்
    புதிய ஐபோன் 15 சீரிஸில் பேட்டரியின் அளவை அதிகரிக்கும் ஆப்பிள் ஆப்பிள்
    புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான கேலக்ஸி M34-ஐ வெளியிட்டது சாம்சங் சாம்சங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025