செவ்வாய் கிரகத்தின் காலை மற்றும் மாலை வேளையின் அழகிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறது நாசா
செய்தி முன்னோட்டம்
நாசாவின் க்யூரியாசிட்டி ரோவரானது செவ்வாய் கோளில் படம்பிடித்த காலை மற்றம் மாலை வேளை புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது அந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்.
க்யூரியாசிட்டி மற்றும் பெர்செவரன்ஸ் எடுக்கும் புகைப்படங்களை அந்நிறுவனம் எப்போதும் பகிர்வது வழக்கம். ஆனால், இந்த புகைப்படம் வேறு கோளின் காலை மற்றும் மாலை வேளை எப்படி இருக்கும் என்பதை நமக்குக் காட்டும் வகையில் இருக்கிறது.
காலை வேளையில் 5 புகைப்படங்களை ஏழரை நிமிட இடைவெளியில் படம்பிடித்திருக்கிறது க்யூரியாசிட்டி. அதேபோல மாலை வேளையிலும் 5 புகைப்படங்களை ஏழரை நிமிட இடைவெளியிலி படம்பிடித்திருக்கிறது.
அந்த ரோவரில் பொருத்தப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளை நேவிகேஷேன் கேமராவைப் பயன்படுத்தி இந்த புகைப்படங்களை எடுத்திருக்கிறது க்யூரியாசிட்டி ரோவர்.
நாசா
க்யூரியாசிட்டி ரோவரின் புகைப்படம்:
தனித்தனியாக எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களை ஒன்றாக இணைத்து அதற்கு ஏற்றாற்போல வண்ணங்களைச் சேர்ந்த, செவ்வாய் கிரகத்தின் காலை மற்றும் மாலை வேளை எப்படி இருக்கும் என்ற தோற்றத்தை நமக்கு அளித்திருக்கிறது நாசா.
இதில் காலை வேளை புகைப்படமானது செவ்வாய் கிரகத்தின் காலை நேரமான 9.20 மணிக்கும், மாலை வேளை புகைப்படமானது அந்த கிரகத்தின் மாலை நேரமான 3.40 மணிக்கும் எடுக்கப்பட்டிருப்பதாக தங்களது வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது நாசா.
இந்தப் புகைப்படங்களை நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் மையத்தைச் சேர்ந்த க்யூரியாசிட்டி பொறியாளர் டக் எல்லிசன் என்பவரே அந்த ரோவரைக் கொண்டு திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறார்.