சனி கிரஹத்தின் வியப்பூட்டும் வளையங்கள்: நாசா வெளியிட புகைப்படம்
நாசாவின் ஹப்பிள் விண்வெளி டெலஸ்கோப், பல ஆண்டுகளாக, சனி கிரஹத்தை கண்கணித்து, அதன் புகைப்படங்களை ஆராய்ச்சிக்கு அனுப்பி வருகிறது. இந்த ஹப்பிள் விண்வெளி டெலஸ்கோப், பூமியை 535 கிமீ உயரத்தில் சுற்றி வருகிறது. சனி கிரஹத்தினை சுற்றி இருக்கும் வளையங்கள், சூரியனின் சுற்றுப்பாதையில் எவ்வாறு வித்தியாசமாக தோன்றுகிறது என்பதை பற்றி ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக, சமீபத்தில் பல புகைப்படங்களை, அந்த ஹப்பிள் அனுப்பி உள்ளது. விண்வெளி ஏஜென்சியின் கூற்றுப்படி, சனியின் வளையங்கள் சூரியனைச் சுற்றி வரும்போது "மாறும் வளையங்களாக" வெளிப்படுகிறது.
சனி கிரஹத்தின் வியப்பூட்டும் வளையங்கள்
மேலும், சனியின் வளையங்கள், அவற்றின் விளிம்பிலிருந்து பார்க்கும்போது, சிறியதாகவும் மெல்லியதாகவும் இருக்கும். ஆனால் கோள் அதன் சுற்றுப்பாதையில் ஒரு கோணத்தில் பார்க்கக்கூடிய வகையில் மேலும் பயணிக்கும் போது, அதன் வளையங்களின் முழு நீல அகலம் புலப்படும். சனியின் வளைய அமைப்பு, கிரகத்திலிருந்து 282,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மற்றும் ஒவ்வொரு வளையத்திற்கும் இடையில் இடைவெளிகளும் பிரிவுகளும் உள்ளன. சனியின் வளையங்கள் வால்மீன்கள், சிறுகோள்கள் அல்லது சிதைந்த நிலவுகளால் ஆனவை என்று கருதப்படுகிறது. அவை கிரஹத்தின், சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசையால், கிரஹத்தை நெருங்கமுடியாமல், சுற்றி வருகிறது எனவும் கூறப்படுகிறது. மேலும் அந்த வளையங்களில், சிறிய துகள்கள், தூசி அளவிலான பனிக்கட்டிகள் முதல் பெரிய மலைகள் கூட அடங்கும், என கூறப்படுகிறது.