ஆர்ட்டெமிஸ்- 2 விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிவித்த நாசா!
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் 50 ஆண்டுக்கு பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான முதற்கட்ட சோதனையாக ஆர்ட்டெமிஸ் 1 ஆளில்லா விண்கலத்தை நாசா வெற்றிகரமாக அனுப்பியது. இந்த நிலையில், ஆர்ட்டெமிஸ்-2 ராக்கெட் ஏவும் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. அவர்கள் ஜெர்மி ஹேன்சன், விக்டர் க்ளோவர், ரீட் வைஸ்மேன், கிறிஸ்டினா ஹம்மக் கோச் ஆகியோர் 2024 ஆம் ஆண்டு நவம்பரில் நிலவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது. மேலும், நான்கு வீரர்களில் மூன்று பேர் அமெரிக்கர்கள் மற்றும் ஒரு கனடா விண்வெளி ஏஜென்சி வீரரும் இடம்பெற்றுள்ளார்.
ஆர்ட்டெமிஸ்-2 விண்வெளிக்க செல்ல முக்கிய நோக்க என்ன?
இந்த திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் முதல் பெண் என்ற சிறப்பை கிறிஸ்டினா ஹம்மக் கோச் பெற்றுள்ளார். இவருக்கு இது இரண்டாவது பயணமாக இருக்கும். இதற்கு முன்பு 328 நாட்கள் விண்வெளியில் இருந்து நீண்ட ஒற்றை விண்வெளிப் பயணம் என்ற சாதனையையும் கிறிஸ்டினா செய்துள்ளார். ஆர்ட்டெமிஸ்-2 எதற்காக செல்கிறது? ஆர்ட்டெமிஸ் 2 ஆனது 10 நாட்கள் பயணமாக 4 விண்வெளி வீரர்களுடன் செல்லும். இவை ஓரியன் விண்கலத்தின் பாதுகாப்பு தரம் குறித்து ஆய்வு செய்யும். அதன் பின் மனிதர்கள் நீண்ட நாட்கள் தங்கி ஆய்வு செய்ய ஏற்றதாக உள்ளதா என சோதனை செய்ய உள்ளார்கள். எனவே, பூமியில் இருந்து 10,300 கிலோமீட்டர் பயணிக்கும் ஆர்ட்டெமிஸ்-2 குழுவினர்கள் சந்திரனையும், நம் பூமியையும் காணமுடியும்.