NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / மோட்டோரோலாவின் புதிய RAZR ஃபோல்டபில் விரைவில் அறிமுகம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மோட்டோரோலாவின் புதிய RAZR ஃபோல்டபில் விரைவில் அறிமுகம் 
    மோட்டோரோலாவின் அடுத்த தயாரிப்பைச் சுற்றி எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது

    மோட்டோரோலாவின் புதிய RAZR ஃபோல்டபில் விரைவில் அறிமுகம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 15, 2024
    08:58 am

    செய்தி முன்னோட்டம்

    ஸ்மார்ட்போன் துறையில் முன்னணி நிறுவனமான மோட்டோரோலா, தனது எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனை சமீபத்தில் வெளியிட்டது.

    அடுத்ததாக அந்நிறுவனம் தனது பிரீமியம் மாறுபாட்டான எட்ஜ் 50 அல்ட்ராவை ஏப்ரல் 16 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்தது.

    இந்த வெளியீடுகளுக்கு மத்தியில், மோட்டோரோலாவின் அடுத்த தயாரிப்பைச் சுற்றி எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    மோட்டோரோலாவின் பிரபலமான RAZR தொடரின் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்களில் ஒரு புதிய அறிமுகமாக, RAZR Plus 2024 என்று பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகவுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    வரவிருக்கும் RAZR ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இன்னும் முழுதாக வெளியாகவில்லை. இருப்பினும், XT2453-2 என்ற மாடல் எண்ணைக் கொண்ட புதிய மோட்டோரோலா ஃபோனுக்கு சீனா சமீபத்தில் சான்றிதழ் அளித்துள்ளது.

    வடிவமைப்பு

    RAZR Plus 2024 இன் சாத்தியமான வடிவமைப்பு அம்சங்கள்

    சீனாவின் சான்றிதழ், இந்த போனின் விவரக்குறிப்புகள் அல்லது பெயரைப் பற்றி அதிகம் வெளியிடவில்லை, ஆனால் வரவிருக்கும் மோட்டோரோலா RAZR ஆனது, அதன் US பதிப்பிற்கு XT-2453-3 என்ற குறியீட்டு எண்ணைக் கொண்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது.

    இந்த நிலையில் மாடல் எண்ணை வெளிப்படுத்திய அதே கசிவு, இந்த மொபைலின் சாத்தியமான அம்சங்கள் பற்றியும் தெரிவிக்கிறது.

    RAZR Plus 2024 ஆனது, தற்போதுள்ள மாடலைப் போலவே, ஒரு பாதியில் ஒரு கவர் டிஸ்ப்ளே மற்றும் மேல் வலதுபுறத்தில் இரண்டு கேமரா வளையங்களுடன் அதன் முந்தைய பாதிப்புகளை பிரதிபலிக்கிறது.

    திறக்கப்படும் போது, ​​செல்ஃபிக்களுக்காக மையமாக அமைந்துள்ள பஞ்ச்-ஹோல் கேமராவுடன் கூடிய கேமராவை கொண்டிருக்கும்.

    இந்த மொபைல் விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மோட்டோரோலா
    ஸ்மார்ட்போன்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மோட்டோரோலா

    இணையத்தில் கசிந்த புதிய மோட்டோரோலா ரேசர் 2023 தொழில்நுட்பம்
    எப்படி இருக்கிறது தொடக்க நிலை மோட்டோ E13: ரிவ்யூ!  மொபைல் ரிவ்யூ
    எப்படி இருக்கிறது மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன்?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    இந்தியாவில் வெளியாகவிருக்கும் மோட்டோரோலாவின் ஃபிளிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் ஸ்மார்ட்போன்

    ஸ்மார்ட்போன்

    புதிய மிட்ரேஞ்சு சிப்செட்களை அறிமுகப்படுத்தவிருக்கும் குவால்காம் மற்றும் மீடியாடெக் தொழில்நுட்பம்
    புதிய 'ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3' சிப்செட்டை வெளியிட்ட குவால்காம் கேட்ஜட்ஸ்
    பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக நத்திங் சேட்ஸ் செயலியானது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் ஆண்ட்ராய்டு
    இந்தியாவில் விற்பனையாகி வரும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025