AI வசதியுடன் கூடிய 'பிங்' தேடுபொறி.. அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்!
AI வசதியுடன் கூடிய பிங் தேடுபொறியை சில மாதங்களாவே சோதனை செய்து வந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம். குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வெளியிட்டிருந்து அந்த சேவை, தற்போது அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இத்துடன் பிங் சாட்டில் சில புதிய வசதிகளையும், அதன் புகைப்படம் உருவாக்கும் சேவையில் சில விரிவாக்கங்களையும் செய்திருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். ஆனால், இந்த பிங் தேடுபொறியை மைக்ரோசாஃப்டின் எட்ஜ் ப்ரௌசரில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைத்திருக்கிறது மைக்ரோசாப்ட். கூகுளின் க்ரோம் ப்ரௌசரில் பிங் தேடுபொறியை தேடினாலும், எட்ஜிற்கே மடைமாற்றம் செய்துவிடுகிறது. இந்தப் புதிய AI வசதியுடன் கூடிய தேடுபொறியைப் பயன்படுத்துவதன் மூலம் மிகவும் சிறப்பான தேடுபொறி சேவையை பயனர்கள் உணர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பிங் சாட்'டில் புதிய வசதிகள்:
தற்போது AI வசதியுடன் கூடிய பிங் சாட்டில் கேட்கும் கேள்விகளுக்கு வெறும் டெக்ஸ்டாக மட்டும் அல்லாமல், சார்ட்டுகள் மற்றும் கிராஃபுகளுடன் கூடிய வரிவான மற்றும் தெளிவான பதிலை அளிக்கிறது பிங் சாட். நாம் பிங் சாட்டில் மேற்கொள்ளும் கான்வர்சேஷன்களை சாட் ஹிஸ்டரி மூலம் இனி மீண்டும் எடுத்து பயன்படுத்த முடியும். மேலும், சாட்ஜிபிடியில் ஓபன்ஏஐ வழங்கிய பிளக்இன் வசதியைப் போலவே, பிங் சாட்டிலும் பிளக்இன் வசதியை அளித்திருக்கிறது மைக்ரோசாஃப்ட். இதன் மூலம் மூன்றாம் தர பிளக்இன்களை பிங் சாட்டுடன் இனைத்து இப்போது பயன்படுத்த முடியும். புகைப்படங்களை உருவாக்குவதை தற்போது 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் விரிவாக்கம் செய்திருக்கிறது மைக்ரோசாஃப்ட். புகைப்படங்களை அப்லோடு செய்து, அதற்குத் தொடர்புடைய உள்ளடக்கங்களை தேடும் வசதியையும் விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறதாம்.