LOADING...
அக்டோபர் 13 முதல் முடிவுக்கு வரும் மைக்ரோசாப்ட் 'Office 2021' சேவை!பயனர்களுக்கு உள்ள ஆபத்து என்ன?
எனினும் அக்டோபர் 13-க்கு பிறகும் Office 2021 செயலிகள் வழக்கம் போல் இயங்கும்

அக்டோபர் 13 முதல் முடிவுக்கு வரும் மைக்ரோசாப்ட் 'Office 2021' சேவை!பயனர்களுக்கு உள்ள ஆபத்து என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 22, 2026
03:09 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், தங்களின் 'ஆபீஸ் 2021' உற்பத்தித் தொகுப்பிற்கான அதிகாரப்பூர்வ ஆதரவு மற்றும் சேவைகளை வரும்அக்டோபர் 13, 2026 அன்றுடன் முழுமையாக நிறுத்திக்கொள்ள போவதாக அறிவித்துள்ளது. இந்த தேதிக்கு பிறகு, இந்த மென்பொருளுக்கான பாதுகாப்பு மேம்பாடுகள், பிழை திருத்தங்கள் அல்லது தொழில்நுட்ப ஆதரவுகள் எதுவும் நிறுவனத்தால் வழங்கப்படாது. அக்டோபர் 13-க்கு பிறகும் Office 2021 செயலிகள் வழக்கம் போல் இயங்கும் என்றாலும், புதிய பாதுகாப்பு அப்டேட்டுகள் கிடைக்காது என்பதால் பயனர்களின் கணினிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் கண்டறியப்படும் புதிய மென்பொருள் குறைபாடுகள் சரிசெய்யப்பட மாட்டாது என்பதால், வைரஸ்கள், ஸ்பைவேர்கள் மற்றும் பிற தீம்பொருட்களின் தாக்குதலுக்கு பயனர்கள் ஆளாக நேரிடலாம் என மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.

பரிந்துரை

மைக்ரோசாப்ட் 365 சேவைக்கு மாற பரிந்துரை

இந்த சேவை நிறுத்தக் கொள்கையானது ஆபீஸ் 2021-ன் அனைத்து பதிப்புகளுக்கும் பொருந்தும். மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது சந்தா அடிப்படையிலான 'மைக்ரோசாப்ட் 365' சேவைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதால், பயனர்களை அதற்கு மாறுமாறு ஊக்குவித்து வருகிறது. மைக்ரோசாப்ட் 365 சேவையில் வழக்கமான அம்சங்கள், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் கிளவுட் வசதிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. வீட்டு உபயோகத்திற்காக ஆபீஸ் 2021 மென்பொருளை பயன்படுத்துபவர்கள், தங்களின் தற்போதைய பதிப்பையே தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றாலும், தடையற்ற பாதுகாப்பிற்குப் புதிய பதிப்பிற்கு மாறுவதே சிறந்தது. வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பெருநிறுவனப் பயனர்கள் தங்களின் தகவல் IT துறையின் வழிகாட்டுதலின்படி, தங்களின் உள்கட்டமைப்புத் திட்டங்களை மறுபரிசீலனை செய்து புதிய மேம்படுத்தப்பட்ட மென்பொருள்களுக்கு மாறத் திட்டமிடுமாறு மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement