ஒன்றிணைந்த ஆப்பிள் & மெட்டா! மேக் ஸ்டூடியோவில் மாஸ் காட்டும் மியூஸ் ஸ்பார்க் ஓபன்ஏஐ
செய்தி முன்னோட்டம்
தனியுரிமை விவகாரங்கள் மற்றும் விளம்பரக் கட்டுப்பாடுகள் காரணமாக பல ஆண்டுகளாக கடுமையான மோதலில் ஈடுபட்டு வந்த ஆப்பிள் மற்றும் மெட்டா நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புரட்சிக்காக தற்போது கை கோர்த்துள்ளன. மெட்டா நிறுவனத்தின் புதிய 816 பில்லியன் அளவுருக்கள் கொண்ட மியூஸ் ஸ்பார்க் ஓபன் என்ற திறந்தநிலை ஏஐ மாடல், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் ஸ்டூடியோ கணினிகளில் மிகத் திறம்பட இயங்கும் வகையில் பிரத்யேகமாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
ஒருங்கிணைந்த நினைவகம்
M5 அல்ட்ரா சிப் மற்றும் ஒருங்கிணைந்த நினைவகம்
மெட்டாவின் இந்த மியூஸ் ஸ்பார்க் ஓபன் மாடலை இயக்க, ஆப்பிளின் புதிய M5 அல்ட்ரா சிப் பொருத்தப்பட்ட இரண்டு முதல் நான்கு மேக் ஸ்டூடியோ கணினிகள் தேவைப்படும்.
ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக MLX இயங்குதளத்தின் மூலம் தண்டர்போல்ட் 5 வழியே இணைக்கப்படும் இரண்டு கணினிகள், 1TB ஒருங்கிணைந்த நினைவகத்துடன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை போல செயல்படும்.
இதன் மூலம் சிக்கலான மென்பொருள் வடிவமைப்பு மற்றும் குறியீட்டு முறைகளை உள்ளூர் சாதனத்திலேயே அதிவேகத்தில் செய்ய முடியும்.
தனியுரிமை
முழுமையான தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை
இந்த ஏஐ மாடல் கிளவுட் சேவைகளின் உதவி இன்றி நேரடியாகப் பயனரின் மேக் கணினியிலேயே இயங்குவதால், பயனர்கள் உள்ளிடும் தரவுகள் அல்லது கட்டளைகளை மெட்டா நிறுவனத்தால் பார்க்கவோ கண்காணிக்கவோ முடியாது.
"இந்தப் பகிர்வில் டெவலப்பர்களின் தகவல்கள் எதுவும் மெட்டாவிற்கு செல்லாது" என மெட்டாவின் ஏஐ தலைமை அதிகாரி அலெக்ஸாண்டர் வாங் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் தலைமை நிர்வாகி ஜான் டர்னஸ் இக்கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்து, "மேக் ஸ்டுடியோ சாதனங்கள் உள்ளூர் ஏஐ கணக்கீடுகளின் எல்லையைத் தாண்டி செல்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏஐ சந்தை
ஏஐ சந்தையில் ஆப்பிள் - மெட்டா கூட்டணியின் தாக்கம்
கடந்த 2018 கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா சர்ச்சை மற்றும் 2021 ஆப்பிள் தனியுரிமை மாற்றங்களால் மெட்டாவிற்கு $10 பில்லியன் வருவாய் இழப்பு ஏற்பட்டது வரை இரு நிறுவனங்களும் முரண்பட்டு வந்தன.
தற்போது ஏஐ தேவைகளுக்காக இணைந்துள்ளது குறித்துப் பேசிய அலெக்ஸாண்டர் வாங், "பெற்றோர்கள் மீண்டும் இணைந்து அன்பாகப் பழகுவது மகிழ்ச்சியளிக்கிறது" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
இந்த ஓபன்-வெயிட் மாடல் கூகுள் மற்றும் ஓபன்ஏஐ போன்ற மூடிய ஏஐ மாடல்களுக்குப் போட்டியாக மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.