LOADING...
IT விதி திருத்தங்கள் 2026: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு! தனிநபர் போஸ்ட்களுக்கும் இனி கட்டுப்பாடு?
IT விதி திருத்தங்கள் 2026 குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு

IT விதி திருத்தங்கள் 2026: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு! தனிநபர் போஸ்ட்களுக்கும் இனி கட்டுப்பாடு?

எழுதியவர் Sekar Chinnappan
Apr 11, 2026
12:49 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021இல் மத்திய அரசு சில முக்கியத் திருத்தங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இது குறித்துப் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கருத்து தெரிவிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை, ஏப்ரல் 29 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அறிவித்துள்ளது. முன்னதாக இதற்கான கடைசித் தேதி ஏப்ரல் 14 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட கிரியேட்டர்கள்

தனிப்பட்ட கிரியேட்டர்களுக்கும் 'நெறிமுறைச் சட்டம்'

இந்தத் திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ள மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இதுவரை டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கு மட்டுமே பொருந்தும் 'நெறிமுறைச் சட்டம்', இனி தனிப்பட்ட சமூக வலைதளப் பயனர்களுக்கும் பொருந்தும். அதாவது, செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடும் தனிநபர்களும் இனி இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். இதன் மூலம் டிஜிட்டல் உள்ளடக்கங்களுக்கான பொறுப்புணர்வை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

கூடுதல் அதிகாரம்

அரசின் கூடுதல் அதிகாரங்கள் மற்றும் தரவு சேமிப்பு

புதிய விதிமுறைகளின்படி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இனி பொதுமக்களின் புகார்களுக்காகக் காத்திருக்காமல், தானாகவே முன்வந்து டிஜிட்டல் உள்ளடக்கங்கள் குறித்து முறையான ஆய்வுகளைத் தொடங்க முடியும். மேலும், பயனர் தரவுகளைச் சேமித்து வைப்பதிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதர சட்டங்களின்படி தேவைப்படும் பட்சத்தில், 180 நாட்களுக்குப் பிறகும் தளங்கள் பயனர் தரவுகளை அழிக்காமல் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் இதில் உள்ளது.

Advertisement

ஆலோசனை

ஜனநாயக ரீதியான ஆலோசனைகள்

இந்தக் கால அவகாச நீட்டிப்பு என்பது கூகுள், மெட்டா போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துகளை விரிவாகப் பதிவு செய்ய ஒரு வாய்ப்பாக அமையும். இந்தத் திருத்தங்கள் டிஜிட்டல் தளங்களின் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு இடையே ஒரு சமநிலையை உருவாக்கும் என அரசு நம்புகிறது. ஏப்ரல் 29க்குள் பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு, புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன.

Advertisement