பெண்களுக்காக உருவாக்கப்பட்ட டெக் சாம்ராஜ்யம்: ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள வணிகத்தை உருவாக்கிய பெண்
தொழில்நுட்ப உலகில் ஆண்கள் கோலோச்சும் அளவுக்கு பெண்கள் அதிகம் பங்கேற்பதில்லை என்ற பரவலான கருத்து இருக்கிறது. ஆனால், ஒரு பெண்ணால், பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் மதிப்பு இன்று ட்ரில்லியன் டாலர் அளவு வளர்ந்துள்ளது. டெக் உலகில் பெண்களுக்கு முன்னோடியாக திகழும் இந்த சாம்ராஜ்யத்தை உருவாக்கியவரின் பெயர் இடா டின். 2016 ஆம் ஆண்டு FemTech என்ற பெயருடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளது. பெண்களை மட்டுமே பாதிக்கும் அல்லது பெண்களால் பெருமளவில் எதிர்கொள்ளப்படும் உடல் நலப் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் அனைத்து விதமான தொழில்நுட்ப தயாரிப்புகளை மற்றும் கண்டுபிடிப்புகளை இது உள்ளடக்கியுள்ளது.
பல ஆயிரம் கோடி நிறுவனத்துக்கு முன்னோடியாக இருந்த முதல் மாதவிடாய் டிராக்கிங் செயலி
FemTech தொடங்குவதற்கான முதல் படியாக இருந்தது, மாதவிடாய் சுழற்சியை டிராக் செய்ய உதவும் செயலியை கண்டறிந்தது தான்! பெண்களுக்கான ஆரோக்கியத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களில் மாதவிடாய் சுழற்சியை டிராக் செய்ய உதவும் செயலிகள் தற்போது பிரபலமாக இருக்கலாம். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, க்ளூ என்ற அப்ளிகேஷன் தொடங்கப்பட்டு, மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செயலியை 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயன்படுத்துகிறார்கள். இதை உருவாக்கிய பின்னர், இடா டின் பெண்களுக்காக அனைத்து ஆரோக்கிய மற்றும் உடல் நல சேவைகள், தயாரிப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வர முடிவு செய்தார். அவ்வாறு உருவானது தான் FemTech.