ப்ராஜெக்ட் ஸ்ட்ராபெரி: AI இன் பகுத்தறிவு திறன்களை மேம்படுத்த ஓபன்ஏஐ முயற்சி
ஓபன்ஏஐ, 'ஸ்ட்ராபெரி' என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. AI மாடல்களின் பகுத்தறிவு திறன்களை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். AI மாடல்களின் கேள்விக்கு பதிலளிக்கும் திறனை மட்டுமல்லாமல், இணையத்தில் தன்னாட்சி முறையில் ஆழமான ஆராய்ச்சியை செய்யும் திறனை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களைப் பற்றி கேட்டபோது, ஓபன்ஏஐ செய்தித் தொடர்பாளர், "எங்கள் AI மாதிரிகள் நம்மைப் போலவே உலகைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று கூறினார்.
மேம்பட்ட பகுத்தறிவை நோக்கிய 'ஸ்ட்ராபெர்ரி' திட்டம்
முன்பு Q* என அழைக்கப்பட்ட 'ஸ்ட்ராபெரி' திட்டத்தின் விவரங்களை ஓபன்ஏஐ ரகசியமாக வைத்திருக்கும், இந்த திட்டம் AI தொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது. தற்போதைய AI மாதிரிகளை விட சிக்கலான அறிவியல் மற்றும் கணித கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறனை வெளிப்படுத்தும் AI தொழுல்நுட்பம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. செவ்வாயன்று நடைபெற்ற உள் ஆல்-ஹேண்ட்ஸ் மீட்டிங்கில், மனிதனைப் போன்ற பகுத்தறிவு திறன்களைக் கொண்டிருப்பதாகக் கூறும் ஒரு ஆராய்ச்சித் திட்டத்தின் டெமோவை ஓபன்ஏஐ காட்டியது. ஆனால் 'ஸ்ட்ராபெரி' திட்டம் நிரூபிக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.